ஹோட்டல் அறையில் தலையணை உறையை திருடிய பிரபல இளம் நடிகை.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா ஹோட்டல் அறையில் தலையணை உறையை திருடியதாக தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.
கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. மாடலிங் மூலம் தனது கேரியரை தொடங்கிய இவர், கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
அடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் ஹிட்டாகி வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதனை தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமானார் ராஷ்மிகா.

தமிழில் சுல்தான்
தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதோடு தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் அதிக சம்பளம் பெரும் நடிகையாகவும் உள்ளார். தமிழில் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

காதல் பிரேக்கப்
நடிகை ராஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்த தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே கன்னட நடிகர் ஒருவரை காதலித்தார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் நிச்சயதார்த்தம் வரை சென்ற அந்த காதல் பிரேக்கப் ஆனது.

கரண்ட் காதல்
இதனால் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் ராஷ்மிகா மந்தனா. அடிக்கடி சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களுடன் பேசிய அவர் தனது கரண்ட் காதல் குறித்து மனம் திறந்தார்.

உடற்பயிற்சி
இந்நிலையில் நேற்று முன்தினம் ரசிகர்களிடம் வீடியோ வாயிலாக உரையாடினார். அப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தான் மனச் சோர்வுடன் இருந்தால் உடற்பயிற்சி செய்வது தனது வாடிக்கை என்றும் உடற்பயிற்சி செய்வதால் மன அழுத்தத்தில் இருந்து ரிலாக்ஸ் ஆவதாகவும் தெரிவித்துள்ளார்.

திருடிய நடிகை
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு ஸ்டார் ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாகவும் அப்போது அந்த அறையில் இருந்த தலையணையின் கவர் மிகவும் அழகாக இருந்ததால் அதனை திருடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் உங்களின் நடிப்பால் எங்களின் இதயங்களை மட்டும் தான் திருடுகிறீர்கள் என்று பார்த்தால் தலையணை உறைகளையும் விட்டு வைப்பதில்லையா என கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











