ப்ளீஸ்… இனிமே இப்படி பண்ணாதீங்க… வருத்தப்பட்ட ராஷ்மிகா மந்தனா !

மும்பை : 900கிலோ மீட்டர் பயணித்து தன்னை சந்திப்பதற்காக வந்த ரசிகரிடம் ராஷ்மிகா மந்தனா ட்விட்டரில் தனது வருத்தத்தை தெரிவித்தார்.

தன்னை சந்திக்கயாரும் வரவேண்டாம் என்றும், இந்த செயல் என்னை வருத்தமடைய வைக்கிறது.

நிச்சயம் ஒருநாள் நான் உங்களை சந்திப்பேன் அதுவரையில் உங்கள் அன்பை வலைத்தளத்தில் பகிர்ந்திடுங்கள் என்று கூறியுள்ளார்.

தீவிர ரசிகர்

தீவிர ரசிகர்

தமிழ், தெலுங்கு,கன்னடம்,இந்தி படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவின் தீவிர ரசிகரான தெலுங்கானாவை சேர்ந்த ஆகாஷ்த்ரிபாதி. ராஷ்மிகாவை நேரில் பார்க்கும் ஆசையால் கூகுள் மேப்பில் முகவரியை தேடிக்கண்டுபிடித்து கிளம்பிவிட்டார்.

ராஷ்மிகா ஊரில் இல்லை

ராஷ்மிகா ஊரில் இல்லை

தெலுங்கானாவில் இருந்து ராஷ்மிகாவின் வீடு இருக்கும் கொடகு பகுதி, விராஜ்பேட்டுக்கு 900 கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறார். தெலுங்கானாவில் இருந்து மைசூருக்கு ரயிலில் வந்த ஆகாஷ், அங்கிருந்து ஆட்டோ மூலம் முக்குலாவுக்கு சென்றிருக்கிறார். வழியில் இவரை பிடித்து விசாரித்த காவல்துறையினர், ராஷ்மிகா ஊரில் இல்லாத தகவலையும், குட்பைஇந்தி படத்தில் நடிப்பதற்காக மும்பையில் இருக்கிறார் என்கிற விவரத்தையும் கூறி ஆகாஷை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

மிகுந்த வருத்தம்

மிகுந்த வருத்தம்

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில், "நண்பர்களே, உங்களில் ஒருவர் நீண்ட தூரம் பயணித்து என்னைப் பார்க்க வீட்டிற்குச் சென்றார் என்ற தகவல் என் கவனத்திற்கு வந்தது. தயவு செய்து அப்படி எதுவும் செய்ய வேண்டாம். இந்த செயல் எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. நிச்சயம் ஒரு நாள், நான் உங்களை சந்திப்பேன். அதுவரையில் உங்கள் அன்பை இணையத்தில் காட்டுங்கள். நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

231 கிமீ நடந்தே வந்தனர்.

231 கிமீ நடந்தே வந்தனர்.

இதேபோல தெலுங்கு மெகா ஸ்டார் ராம் சரணின் தீவிர ரசிகர்கள் 3 பேர் ஜோகுலாம்பா கட்வாலில் இருந்து 4 நாட்களாக 231 கி.மீ தூரம் நடந்தே ஹைதராபாத் வந்து ராம் சரணை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இவர்களை பார்த்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்த ராம் சரண் அவர்களை ஆரத் தழுவி நன்றி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X