ஹேப்பி பர்த்டே ராஷ்மிகா மேடம்..காமன் டிபியை வெளியிட்டு ரசிகர்கள் வாழ்த்து !

சென்னை : இளைஞர்களின் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனா தனது 25வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார்.

இவர் அண்மையில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனங்களை வென்றார்

ரஷ்மிகா மந்தனாவின் பிறந்த நாளை முன்னிட்டு இவரது ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் காமன் டிபியை வெளியிட்டும், இவரது புகைப்படத்தை பதிவிட்டும் மிக சிறந்த முறையில் கொண்டாடி வருகின்றனர்.

விளம்பரங்களில்

விளம்பரங்களில்

1996ம் ஆண்டு ஏப்ரல் 5ந் தேதி கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டில் பிறந்தவர் நடிகை ராஷ்மிகா. இவர் சைக்காலஜி, ஆங்கில இலக்கியம் என பல பட்டங்களை பெற்றுள்ளார். இவருக்கு மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் படித்துக் கொண்டு இருக்கும் போதே சில விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

கன்னட படத்தில் அறிமுகம்

கன்னட படத்தில் அறிமுகம்

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ராஷ்மிகா,அஞ்சனி புத்ரா, சமக் ஆகிய கன்னட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கு சினிமாவில் சலோ என்ற திரைப்படத்தின் அறிமுகமானார்.

திருப்புமுனை

திருப்புமுனை

பின்னர் பெண்களின் கனவு நாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்திற்கு பின் பட்டி தொட்டி எங்கும் ராஷ்மிகா பிரபலமானார். இப்படம் 100 கோடி வசூலை வாரிக்குவித்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

துறுதுறு நடிப்பும்

துறுதுறு நடிப்பும்

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக ஈர்க்கவே, இருவரின் காம்பினேஷனில் அடுத்து உருவானது தான் டியர் காம்ரேட். ராஷ்மிகா வழக்கம்போல் தனக்கே உரிய அழகு முகபாவனைகளும் துறுதுறு நடிப்பும் கலந்து அசரடித்தார்.இப்படமும் வசூலை அள்ளியது.

காமன் டிபி

காமன் டிபி

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக நடித்து வரும் இவர் இன்று தனது 25வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மட்டும் மல்லாது திரைப்பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் காமன் டிபியை வெளியிட்டும், இவரது புகைப்படத்தை பதிவிட்டும் மிக சிறந்த முறையில் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X