Rashmika Mandanna: டீப்ஃபேக் மூலம் ராஷ்மிகாவின் மோசமான வீடியோ.. அமிதாப் பச்சன் கண்டனம்!
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். பான் இந்தியா நாயகியாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக தனுஷின் டி51 படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
முன்னணி நடிகர்களுடன் ராஷ்மிகாவின் அடுத்தடுத்த படங்களால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். கடந்த ஜனவரியில் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்திலும் நடித்திருந்தார் ராஷ்மிகா.

நடிகை ராஷ்மிகா மந்தனா: நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2018ம் ஆண்டில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின்மூலம் எராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிப் படங்களில் சிறப்பான பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். தமிழில் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா, கடந்த ஜனவரியில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அடுத்தடுத்த படங்கள்: முன்னதாக அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள ராஷ்மிகா, தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனுஷின் டி51 படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை சேகர் கம்முலா இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கில் இந்தப் படம் உருவாகவுள்ளது. பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் படத்திலும் நடித்துள்ளார் ராஷ்மிகா. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ: தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம்வந்துக் கொண்டிருக்கும் ராஷ்மிகாவை அசிங்கப்படுத்தும்வகையில் டீப்ஃபேக் மூலம் அவரது முகத்தை வேறொரு நபரின் உடலில் பொருத்தி தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ராஷ்மிகாவின் வளர்ச்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. முகம் சுளிக்க வைக்கும்வகையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
அமிதாப் பச்சன் கண்டனம்: இந்த வீடியோ டீப்ஃபேக் தான் என்பதை கண்டறிந்துள்ள பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் இந்த வீடியோவிற்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஷாரா படேல் என்ற நடிகையின் ஒரிஜினல் வீடியோவில் ராஷ்மிகாவை இணைத்து இந்த வீடியோ வெளியாகியுள்ளதையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
பான் இந்தியா ஸ்டார்: நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்த படங்களில் நடிப்பதுடன் விளம்பரங்களிலும் அதிகமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். முன்னணி நடிகர்களுடன் நடிக்க அதிகமாக இவரை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அணுகி வருகின்றனர். பான் இந்தியா நாயகியாக மாறியுள்ள ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications











