பாவாடையை தூக்கி சொருகி.. இடுப்பில் துண்டை கட்டி.. வயலை உழும் பிரபல நடிகை.. மெர்சலாக்கும் வீடியோ!

சென்னை: பிரபல நடிகை வயரை உழும் வீடியோ வைரலாகி வருகிறது.

கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படம் பெரும் ஹிட்டானது.

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் காதல் என்ற கிசுகிசுவிலும் சிக்கினார் ராஷ்மிகா மந்தனா.

கார்த்தியுடன்..

கார்த்தியுடன்..

தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்திலும் நடித்துள்ளார். இதன்மூலம் தமிழிலும் அறிமுகமாகிறார் ராஷ்மிகா மந்தனா. டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார்.

பாவாடையை தூக்கி சொருகி


இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் வயலில் கை ட்ராக்டர் எந்திரத்தை பிடித்து நிலத்தில் உழுகிறார். சேற்றில் நடந்தப்படியே பாவாடையை தூக்கி சொருகி கொண்டு இடுப்பில் துண்டைக் கட்டியப்படி உழவு செய்கிறார் ராஷ்மிகா மந்தனா.

இங்க மாட்டிக்கிட்டோம்..

இங்க மாட்டிக்கிட்டோம்..

ஏதோ ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிதான் அது என்பது தெரிகிறது. அந்த வீடியோவுக்கு பின்னணியில் எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்.. மக்களா வந்து இங்க மாட்டிக்கிட்டோம்.. என்ற பாடல் ஒலிக்கிறது.

Recommended Video

Semma Thimiru movie Review | Dhruva Sarja, Rashmika Mandanna
நான் நினைத்தது..

நான் நினைத்தது..

இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள ராஷ்மிகா, இந்த லிரிக்ஸை கவனியுங்கள்.. இதை விட பெட்டராக ஒன்று கிடைக்காது.. நான் இந்த காட்சி எடுக்கும் போது என்ன நினைத்தேனோ அது அப்படியே வந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

மிஷன் மஞ்சு..

மிஷன் மஞ்சு..


ராஷ்மிகா மந்தனாவின் இந்த வீடியோவை இதுவரை 11 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்திலும் தீயாய் பரவி வருகிறது. ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் இந்தியிலும் மிஷன் மஞ்சு என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X