அடுத்தடுத்த படங்கள் வெற்றி.. ராஷ்மிகா காட்டுல மழை.. சம்பளத்தை இரு மடங்காக உயர்த்திய நடிகை!
விசாகப்பட்டினம் : நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார்.
அவரது புஷ்பா மற்றும் சீதா ராமம் படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளன. இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளன.
சமீபத்தில் வெளியான சீதா ராமம் படத்தில் சிறப்பான கேரக்டரில் ராஷ்மிகா நடித்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், தமிழில் சுல்தான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்ற நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் அல்லு அர்ஜுனுடன் நடித்திருந்த புஷ்பா படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார் ராஷ்மிகா.

ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீவள்ளி
புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் கருப்பாக அவர் நடித்திருந்தாலும் அவரது கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது. வாய்யா சாமி என்று அவர் கவர்ச்சியாக பாடிய பாடலும் அனைவரின் வரவேற்பையும் பெற்றது. ஊ சொல்றியா பாடலுக்கு இணையாக இந்தப் பாடலும் வரவேற்பை பெற்றது. இதற்கு படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு தாராளமாக ராஷ்மிகா நன்றி கூறலாம்.

விரைவில் இரண்டாவது பாகம்
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் விரைவிலேயே எடுக்கப்பட உள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக ராஷ்மிகா தயாராகி வருகிறார். இதனிடையே நானி, மிருணாள் உள்ளிட்டவர்களுடன் ராஷ்மிகா நடித்து இரு தினங்களுக்கு முன்பு வெளியான சீதா ராமம் படமும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

ஹிட்டடித்த சீதா ராமம்
தன்னுடைய தாத்தா கொடுக்கும் கடிதத்தை சீதாவிடம் சேர்ப்பதற்காக இந்தியா வரும் பாகிஸ்தானி பெண்ணாக இந்தப் படத்தில் ராஷ்மிகா நடித்துள்ள கேரக்டர் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. சீதா மற்றும் ராமை கண்டுபிடிக்கும் அவரது ஒவ்வொரு மூவும் வரவேற்பை பெற்றுள்ளது.

4 நாட்களில் சிறப்பான வசூல்
இந்தப் படம் கடந்த 4 நாட்களில் 25 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. தொடர்ந்து இந்தப் படம் திரையரங்குகளில் சிறப்பாக ஓடிவரும் நிலையில், கலெக்ஷன் மேலும் அதிகரிக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனிடையே நடிகர் விஜய்யுடனும் வாரிசு படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா
தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் மிகவும் உற்சாகமாகியுள்ளார் ராஷ்மிகா. தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தி தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். இதுவரை 2 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுவந்த ராஷ்மிகா, தற்போது அதை 4 கோடி ரூபாயாக உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video

3 பாலிவுட் படங்களில் ராஷ்மிகா
அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் ராஷ்மிகாவின் அந்த படங்களும் ஹிட்டடிக்கும் நிலையில், இந்த சம்பளம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டிலும் தற்போது 3 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ராஷ்மிகா. அமிதாப்புடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











