Rashmika : சமந்தா இல்லன்னா ராஷ்மிகா.. மவுசு ஏறிய நேஷனல் க்ரஷ் நடிகை!
சென்னை :நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் இவரது மார்க்கெட் சிறப்பாகவே உள்ளது.
புஷ்பா உள்ளிட்ட சில பான் இந்தியா படங்களில் நடித்து அந்தப் படங்களும் ஹிட்டடித்த நிலையில் நேஷனல் க்ரஷ் நடிகை என்ற பெயரை ராஷ்மிகா பெற்றுள்ளார்.
இதையடுத்து பான் இந்தியா படமா, கூப்பிடு ராஷ்மிகாவை என்ற அளவிற்கு மாறியுள்ளார் ராஷ்மிகா. தொடர்ந்து மற்ற நடிகைகளையும் ஓரம் கட்டி வருகிறார்.

நடிகை ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில்தான் முதலில் அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்க, தொடர்ந்து விஜய்யுடன் கடந்த ஜனவரியில் வெளியான வாரிசு படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் நடித்துவரும் ராஷ்மிகாவிற்கு இந்தியிலும் அடுத்தடுத்த படங்கள் கமிட்டாகி வருகின்றன.

நேஷனல் க்ரஷ் நடிகை
முன்னதாக அல்லு அர்ஜுனுடன் புஷ்பா படத்தில் நடித்திருந்தார். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா, படத்தின் பாடல்களும் சிறப்பாக அமைய, வசூலிலும் பின்னி பெடலெடுத்தது. இதையடுத்து இந்தப் படத்தின் நாயகியாக நடித்திருந்த ராஷ்மிகாவின் மார்க்கெட்டும் உயர்ந்தது. இந்தப் படம் ராஷ்மிகாவிற்கு நேஷனல் க்ரஷ் என்ற இமேஜை கொடுத்துள்ளது.

விஜய்யுடன் இணைந்த ராஷ்மிகா
தமிழின் முன்னணி நடிகரான விஜய்யுடனும் இணைந்து நடித்துவிட்டார் ராஷ்மிகா. இந்தியிலும் இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனிடையே தற்போது தமிழில் அடுத்ததாக ரெயின்போ என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார் ராஷ்மிகா. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் அசிஸ்டெண்ட் சாந்தரூபன் என்பவர் இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது.

சமந்தாவிற்கு பதிலாக ராஷ்மிகா
இந்தப் படத்தில் முன்னதாக நடிக்க நடிகை சமந்தா தேர்வாகியிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் இந்தப் படத்தில் இணையமுடியவில்லை. இதையடுத்தே தற்போது ராஷ்மிகாவிற்கு அந்த சான்ஸ் கிடைத்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுஙகில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ள நிலையில், இன்றைய தினம் படத்தின் பூஜை போடப்பட்டு டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் டைட்டில் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.

ராஷ்மிகா கோரிக்கை
இதனிடையே ரெயின்போ இயற்கை நமக்கு கொடுத்த பெரிய பரிசு என்றும், அதை தொட முடியாது ஆனால் பார்த்து ரசிக்க முடியும், அதேபோல ரெயின்போ படத்தின் கதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, ஆனால் அந்த கதையை திரையில் சிறப்பாக கொண்டு வர முடியும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராஷ்மிகா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் இதை செய்து முடிக்க ரசிகர்களின் அன்பும் ஆசிர்வாதமும் தனக்கு வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











