Rashmika mandanna: தனுஷின் D51 படத்தில் இணைந்த ராஷ்மிகா மந்தனா.. அவரே வெளியிட்ட வீடியோ!

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது டி50 படத்தை இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். கேங்ஸ்டர் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தை அடுத்து தன்னடைய டி51 படத்தில் பிரபல தெலுங்குப்பட இயக்குநர் சேகர் கம்முலாவுடன் இணையவுள்ளார் தனுஷ்.

Actress Rashmika mandanna joins Dhanushs D51 movie with the direction of Sekhar Kammula

தனுஷ் -சேகர் கம்முலா கூட்டணி படத்தில் இணைந்த ராஷ்மிகா மந்தனா: நடிகர் தனுஷ் சர்வதேச அளவில் பல ப்ராஜெக்ட்களில் இணைந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழில் பள்ளி மாணவனாகவே இவரது முதல் படத்தின் பயணம் துவங்கியது. மிகவும் ஒல்லியாக, நாயகனுக்கான எந்தவிதமான தோற்றமும் இல்லாமல் இருந்த தனுஷ், மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளானார். இந்நிலையில் அவரது தோற்றத்தையே அவர் ப்ளஸ்ஸாக மாற்றியுள்ளார். தற்போது பக்கத்து வீட்டு பையன் லுக்கில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறார்.

தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிகவும் சிறப்பாக தேர்ந்தெடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி மட்டுமில்லாமல் ஹாலிவுட் படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் தனுஷ். அடுத்தடுத்து தேர்ந்தெடுத்த இயக்குநர்களின் சிறப்பான கதைக்களத்தில் நடித்துவரும் தனுஷ், இயக்குநர்களின் சாய்சாக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷின், வாத்தி படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரிடையாக வெளியாகி ரசிகர்களை அசத்தியது.

இந்நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படமும் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி மிரட்டியது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக டி50 படத்தின் சூட்டிங்கில் தற்போது இணைந்துள்ளார் தனுஷ்.

தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க உருவாகிவரும் இந்தப் படத்திற்காக, தன்னுடைய முடியை ஷார்ட்டாக்கி உள்ளார் தனுஷ். சமீபத்தில் திருப்பதியில் இவர் மொட்டையடித்த நிலையில், தன்னுடைய தலைமுடி குறிப்பிட்ட அளவு வளர்வதற்காக காத்திருந்தார். அந்த நேரத்தில் மற்ற நடிகர்களின் போர்ஷன்களை எடுத்து முடித்தார் தனுஷ்.

இந்நிலையில் டி50 படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபல தெலுங்குப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் இணையவுள்ளார் தனுஷ். இந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தில் தற்போது நாயகியாக ராஷ்மிகா மந்தனா இணையவுள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விடியோ மூலம் தகவல் தெரிவித்து உற்சாகத்தையும் பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா. தற்போது புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் ராஷ்மிகா, பாலிவுட்டிலும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் -சேகர் கம்முலா காம்பினேஷனில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ள டி51 படத்தில் அவர் நடிக்கவுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X