பேப்பரில் செய்த உடை.. மேட்சா வைரக் கம்மல்.. ரஷ்மிகாவின் வைரல் பிக்ஸ்!

சென்னை: தென்னிந்திய ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் ஹீரோயின்களில் நடிகை ரஷ்மிகா மந்தனா முதலிடத்தில் உள்ளார்.

விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்த கீதாகோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இவரது ரசிகர்கள் கூட்டம் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த ரஷ்மிகா மந்தனா தற்பொழுது தமிழில் இரண்டு மிகப் பெரிய நடிகர்களுடன் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரஷ்மிகா மந்தனா இப்பொழுது வெளியிட்டுள்ள பேப்பரில் செய்த உடையை அணிந்து கொண்டு போட்டோ எடுத்துள்ளார். இது ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.

தெளவுலத்தாக

தெளவுலத்தாக

தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா, அதேசமயம் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் "கர்நாடக க்ரஷ்" எனவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு தெளவுலத்தாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மிகக் குறைந்த திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரஷ்மிகாவின் மார்க்கெட் தொடர்ந்து எதிரிக் கொண்டே போகிறது.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

ரஷ்மிகா நடித்து வந்த அனைத்து திரைப்படங்களும் வரிசையாக வெற்றி பெற்று வரும் நிலையில் தென்னிந்தியாவில் மிகக்குறைந்த காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

கார்த்தியுடன் சுல்தான்

கார்த்தியுடன் சுல்தான்

இவ்வாறு தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் மூலமும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போகும் ரஷ்மிகாவுக்கு தமிழிலும் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்துவரும் நிலையில், நேரடி தமிழ் படத்தில் எப்போது நடிப்பார் என அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் தற்பொழுது நடித்துக்கொண்டு வருகிறார்.

பாக்ஸ் ஆபிஸ் கிங்காக

பாக்ஸ் ஆபிஸ் கிங்காக

மேலும் ஓரிரு மாதங்களுக்கு முன்பு தளபதி விஜய்யுடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தெலுங்கில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்து வரும் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா என்ற திரைப்படத்திலும் இவர் தற்பொழுது நடித்து வருகிறார்.

க்யூட்டான புகைப்படங்கள்

க்யூட்டான புகைப்படங்கள்

அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடி போட்டு வரும் ரஷ்மிகா சமூக வலைதளங்களில் ரசிகர்களை மகிழ்விக்க தொடர்ந்து பல்வேறு க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள பேப்பர் உடை போட்டோ ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் வைரலாகி வருகிறது.

ஜிமிக்கியும் பேப்பரிலேயே

ஜிமிக்கியும் பேப்பரிலேயே

வெறும் பேப்பரில் செய்யப்பட்ட ட்ரான்ஸ்பரண்ட் உடையில் கொஞ்சம் கவர்ச்சி காட்டியவாறு மெழுகு சிலை போல இருக்கும் ரஷ்மிகா, காதில் போட்டிருக்கும் வைர ஜிமிக்கியையும் பேப்பரிலேயே செய்து அணிந்தவாறு வெளியிட்டுள்ள இந்த அசத்தும் போட்டோ இப்பொழுது ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டு செம வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X