Rashmika Mandanna: முத்த காட்சிக்காக கூடுதல் பணம் கேட்ட விவகாரம்.. ராஷ்மிகா என்ன சொன்னாங்க தெரியுமா?

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

Actress Rashmika mandanna says no about Kissing scene rumour in Animal movie

ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா இணைந்து அனிமல் என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி வெளியானது.

இந்தப் பாடலில் வரும் லிப்லாக் காட்சிக்காக ராஷ்மிகா மந்தனா கூடுதலாக பணம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முத்தக்காட்சிக்காக கூடுதல் பணம் கேட்கவில்லை என ராஷ்மிகா விளக்கம்: நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய அளவில் தமிழ், கன்னடம், தெலுங்கு என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய்யுடன் ராஷ்மிகா நடித்து சமீபத்தில் வாரிசு படம் வெளியானது. முன்னதாக கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் இணைந்து நடித்திருந்தார். இந்த இரு படங்களும் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. தற்போது தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.

தற்போது பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பாடல் காட்சி சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் பாடலில் ரன்பீர் மற்றும் ராஷ்மிகாவின் முத்தக் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருந்தன. இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இந்த லிப்லாக் காட்சியில் நடிப்பதற்காக ராஷ்மிகா மந்தனா கூடுதலாக பணம் பெற்றதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இந்த விஷயத்தை ராஷ்மிகா மந்தனா மறுத்துள்ளார். தான் லிப்லாக் சீனில் நடிப்பதற்காக கூடுதலாக பணம் பெறவில்லை என்றும் தனக்கு ஒரு காட்சி பிடித்திருந்தால் எந்த மாதிரியான காட்சியிலும் தான் நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். பான் இந்தியா நடிகையாக மாறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களின் படங்களில் கமிட்டாகி நடித்துவரும் ராஷ்மிகா நடிப்பில் அடுத்தடுத்து அனிமல், புஷ்பா 2 படங்கள் ரிலீசுக்கு தயாராகிவருகின்றன.

Actress Rashmika mandanna says no about Kissing scene rumour in Animal movie

பிசியான நடிகையாக இருந்தாலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ராஷ்மிகா இன்ஸ்டாகிராம் விளம்பரங்களிலும் அதிகமாக தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இந்நிலையில்தான் ராஷ்மிகா -ரன்பீர் இடையிலான முத்தக்காட்சி அதிகமான விமர்சனங்களை பெற்றுள்ளன. அதிகமான பணம் கிடைத்ததாலேயே இந்த காட்சியில் ராஷ்மிகா நடித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில்தான் இந்த தகவலை ராஷ்மிகா மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரன்பீர் கபூர் -ராஷ்மிகா இணைந்து நடித்துள்ள அனிமல் படம் வரும் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகிளல் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு பாலிவுட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்களிலும் படக்குழுவினர் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ள படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X