ஆபாசம்.. எனக்கு பயமா இருக்கு.. ராஷ்மிகா மந்தனா வேதனை! லவ்டுடே பாணியில் வந்த மார்பிங் வீடியோவால் ஷாக்
சென்னை: இணையத்தில் பரவி வரும் தனது ஆபாசமான மார்பிங் வீடியோவை பார்த்த நடிகை ராஷ்மிகா தொழில்நுட்பத்தை பார்த்தால் பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மும்பை, தொழில்நுட்பத்தில் வளர்ச்சி எந்த அளவுக்கு நல்ல நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்கிறதோ, அதேவேளையில் அதில் அதிகமான ஆபத்துத்துக்களும் இருப்பதை யாராலும் மறுத்து விட முடியாது.
அண்மைக்காலமாக டிரெண்டிங்கில் உள்ளது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி.
இதைப்பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படத்தை அல்லது வீடியோவை சுலபமாக மற்றொருவரின் முகத்தை வைத்துத் மார்பிங் செய்துவிட முடியும்.

ஆபாச வீடியோ: அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகம் மார்பிங் செய்யப்பட்டு ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. படு மோசமான உடை அணிந்த அந்த பெண்ணை ராஷ்மிகா முகம் மாற்றி வெளியாக பிரபலங்களும் வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
ராஷ்மிகா வேதனை: இந்த ஆபாச வீடியோவால் வேதனை அடைந்த ராஷ்மிகா ட்விட்டரில் வேதனையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் மிகவும் வேதனைப்படுகிறேன், மேலும் நான் ஆன்லைனில் பரப்பப்படும் ஆபாச வீடியோவைப்பற்றி பேச வேண்டும். இதுபோன்ற ஒன்று நேர்மையாக, எனக்கு மட்டுமல்ல, தொழில்நுட்பம் தவறாகப்பயன்படுத்தப்படுவதால் இன்று மிகவும் தீங்கு விளைவிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் பயமாக இருக்கிறது.
கற்பனை செய்ய முடியவில்லை: இன்று, ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும், எனது பாதுகாப்புக்கு துணையாக இருக்கும் எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நான் பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இது நடந்தால், இதை எப்படி சமாளித்து இருப்பேன் என்று என்னால் கற்பனை செய்துக்கூட பார்க்க முடியாது. இதுபோன்ற, மோசமான செயலால் நம்மில் பலர் பாதிக்கப்படுவதற்கு முன் இதுபோன்ற செயலை நாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ரஷ்மிகா தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்,.


Click it and Unblock the Notifications











