Rashmika Mandanna - எல்லோரும் பயணப்படுங்கள்.. ரசிகர்களுக்கு ராஷ்மிகா மந்தனாவின் அட்வைஸ்
ஹைதராபாத்: Rashmika Mandanna (ராஷ்மிகா மந்தனா) நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அட்வைஸ் செய்திருக்கிறார்.

இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் அறிமுகமான அவரை தெலுங்கு திரையுலகம் கெட்டியாக பிடித்துக்கொண்டது. அங்கு அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடிக்க அவரது கிராஃப் சரசரவென உயர்ந்தது. அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமடைந்தார்.
பான் இந்தியா ஹீரோயின்: ராஷ்மிகா மந்தனா மீதான கிரேஸ் கீதா கோவிந்தம் படத்திலிருந்தே ரசிகர்களுக்கு ஆரம்பித்துவிட்டது என்றாலும் அவரை அனைவரிடமும் கொண்டுபோய் சேர்த்தது புஷ்பா திரைப்படம். பான் இந்தியா அளவில் வெளியாகி படமும் ஹிட்டானது. அதிலும் படத்தின் பாடல்களில் ராஷ்மிகாவின் நடனம் பெரும் ட்ரெண்டானதால் ராஷ்மிகாவும் இந்திய அளவில் கவனிக்கப்படும் ஹீரோயினாக மாறினார். இதன் காரணமாக ஹிந்தியிலும் கமிட்டாகியிருக்கிறார் அவர்.
ஹிந்தியில் ராஷ்மிகா மந்தனா: அந்தவகையில் அவர் ஹிந்தியில் ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் நடித்திருக்கிறார். இதற்கு முன்னதாக அவர் மிஷன்மஜ்னு என்ற ஹிந்தி படத்திலும் நடித்திருந்தார். அந்தப் படம் டீசண்ட்டான வரவேற்பை பெற்றது. அதேபோல் அனிமல் படமும் ஹிட்டாகி ஹிந்தியில் தனக்கு ஒரு நிலையான இடத்தை கொடுக்கும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ராஷ்மிகா இருக்கிறார்.
லிப் லாக்: அனிமல் படத்திலிருந்து அண்மையில் ஒரு சிங்கிள் பாடல் வெளியானது. அதில் ரன்பீர் கபூருடன் பல காட்சிகளில் லிப் லாக் செய்திருக்கிறார். இதற்காக அவர் அதிகம் பணம் கேட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் முத்தக் காட்சிக்காக அதிக பணம் வாங்கவில்லை. கதைக்கு தேவை என்றால் எந்த மாதிரியான காட்சியிலும் நடிப்பேன் என கூறியிருந்தார்.

பயணப்படுங்கள்; இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் ட்ராவல் செய்வதை ரொம்பவே மிஸ் செய்கிறேன். பயணப்படுங்கள். உங்களது சொந்த ஊருக்கோ, நண்பர்களின் வீட்டுக்கொ அல்லது உங்களது கனவு இடத்துக்கோ குடும்பத்துடனோ இல்லை தனியாகவோ செல்லுங்கள்.பயணம் செய்தால்தான் உங்களது மனம் ஒரு நிலையை பெறும். வித்தியாசமான உணவு, கலாசாரம், வாழ்க்கை முறை அனைத்தும் அற்புதமாக இருக்கும். அதனால் அனைவருமே பயணம் செய்யுங்கள்" என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











