வண்டி வண்டியா வந்த ஃபீலிங்ஸ்.. புஷ்பா 2 பாடலுக்கு யாரும் இப்படி ஒரு உடையில் ஆடி இருக்க மாட்டாங்க!
சென்னை: அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஃபீலிங்ஸ்' இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை கேட்ட இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டு வரும் நிலையில், இந்த பாடலுக்கு நடிகை ரவீனா தாஹா வித்தியாசமான உடையில் ஆட்டம் போட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமன் பின்னணி இசை அமைக்கிறார். இதன் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், டிசம்பர் 5ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி, நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல்: இப்படம் முதல் நாளில், பாக்ஸ் ஆபீஸில் ரூ. 294 கோடியை வசூலித்து, சாதனை படைத்ததாக தயாரிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்து, இந்திய சினிமா வரலாற்றில் சாதனை படைத்தத நிலையில், 11 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் புஷ்பா தி ரூல் படம், ரூ. 1300 கோடி வசூல் செய்தது. இப்படம் விரைரைவில் ரூ. 1500 கோடியை இப்படம் வசூல் செய்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டம் போட்ட நடிகை: புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஊ சொல்றியா மாமா பாடலும், ஓ சாமி பாடலும் மிகப்பெரிய அளவில் ஆட்டம் போட்ட நிலையில், இரண்டாம் பாகத்தில் 'ஃபீலிங்ஸ்' பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. இப்பாடலை தமிழில் விவேகா பாடல் எழுத செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இணைந்து பாடி உள்ளனர். இந்த பாடலைக்கு பிரபலங்கள் பலரும் ஆட்டம் போட்டு வரும் நிலையில், நடிகை ரவீனா தாஹா, பரதநாட்டிய உடையில் ஆட்டம் போட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
நடிகர் விஷ்ணு விஷால், அமலா பால், அம்மு அபிராமி நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமியாக அறிமுகமானவர் நடிகை ரவீனா தாஹா. அந்த படத்தைத் தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் தங்கம் சீரியலில் நடித்தார். பின், பூவே பூச்சூடவா, மௌராகம் 2 போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.


Click it and Unblock the Notifications











