பிரபல நடிகை.. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனாவின் தந்தை திடீர் மரணம்.. பிரபலங்கள் அதிர்ச்சி!
சென்னை: பிரபல நடிகையும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுமான ரவீனாவின் தந்தையின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல பின்னணி குரல் கலைஞர் ஸ்ரீஜா. இவர் நடிகை தேவயானி உட்பட பல முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவரது மகள் ரவீனா ரவி.

ரவீனா ரவி 2017 ஆம் ஆண்டு வெளியான "ஒரு கிடாயின் கருணை மனு" திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். கடைசியாக அவரது நடிப்பில் காவல்துறை உங்கள் நண்பன் திரைபடம் வெளியானது.
இந்தப் படத்தல் சுரேஷ் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை ரவீனாவும் பிரபல பின்னணி குரல் கலைஞர் ஆவார்.
இவர் கத்தி , ஐ போன்ற திரைப்படங்களில் ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீஜாவின் கணவரும் ரவீனாவின் தந்தையுமான ரவீந்திரனாத் திடீரென காலமாகியுள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரவீந்திரனாத் சிகிச்கை பலனின்றி காலமாகியுள்ளார்.
ரவீந்திரனாத்தின் மறைவால் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சினிமா பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











