Coolie movie: விஜய் டூ ரஜினிகாந்த்.. கூலி படத்தில் இணைந்த பிகில் பட நடிகை!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தின் ஷூட்டிங் நேற்றைய தினம் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது. இதற்காக முன்னதாக ரஜினிகாந்த் விமானம் மூலம் ஹைதராபாத் சென்றதை பார்க்க முடிந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அடுத்தடுத்து எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கூலி படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அடுத்த வரவாக பிகில் படத்தில் நடித்து மாஸ் காட்டிருந்த ரெபா மோனிகா இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது ஐதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் சூட்டிங் நடந்து வரும் நிலையில் வரும் 10ம் தேதி சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் நடக்கவுள்ளது.

Rajinikanth Coolie movie Reba monica Lokesh kanagaraj Hyderabad tamil cinema

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தின் சூட்டிங் நேற்றைய தினம் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கூலி படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் சூழலில் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்த ஹைதராபாத்தில் சில தினங்கள் நடக்க உள்ளதாகவும் இதையடுத்து சென்னையில் வரும் 10ம் தேதி படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் நடக்க உள்ளதாகவும் இதற்கான பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஐதராபாத் சூட்டிங்கிற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் அங்கு புறப்பட்டு சென்ற நிலையில் இதன் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தன.

ஐதராபாத்தில் கூலி சூட்டிங்: இந்நிலையில் கூலி படத்தின் சூட்டிங்கை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அதிகபட்சமாக நடத்தி முடிக்க யோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் ரஜினிகாந்துடன் நீண்ட காலங்களுக்குப் பிறகு சத்யராஜ் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த், சத்யராஜுடன் ஸ்ருதிஹாசன் படத்தில் லீட் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே விஜய்யுடன் பிகில் படத்தில் இணைந்து நடித்த ரெபா மோனிகா தற்போது ரஜினிகாந்தின் கூலி படத்திலும் முக்கியமான ரோலில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிகில் பட நடிகை: பிகில் படத்தில் ஒரு தலை காதலால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி தொடர்ந்து புட்பால் மேட்ச்சில் சிறப்பாக செயல்படும் கேரக்டரில் நடித்திருந்தார் மோனிகா. இந்நிலையில் கூலி படத்திலும் அவருக்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் 171 வது படமாக உருவாகி வரும் கூலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் பிரமோ ஆகியவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. இந்த படத்தின் சூட்டிங் நேற்றைய தினம் துவங்கி உள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படம் ரிலீஸ் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிரடி ஆக்ஷன் படம்: இந்தப் படத்தில் அளவுக்கு அதிகமாக அதிரடி ஆக்சன் காட்சிகள் காணப்படும் என்று லோகேஷ் கனகராஜ் முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் இணைந்துள்ள நிலையில் படத்திற்கு அனிருத் இசை அமைக்க கமிட்டாகியுள்ளார். முன்னதாக ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் மிகப்பெரிய அளவில் பாடல்களிலும் பிஜிஎம்மிலும் கவனம் செலுத்தி இருந்தார் அனிருத். அந்த படம் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்ததுடன் காஸ்ட்லியான காரையும் தயாரிப்பாளர்கள் கொடுத்திருந்தனர். இந்நிலையில் அதேபோன்றதொரு மாசான பாடல்கள் மற்றும் பிஜிஎம்ஐ அவர் கூலி படத்திலும் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X