மனைவிக்கு நச்சுனு முத்தம் கொடுத்த ரெடின் கிங்ஸ்லி.. இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து கடந்த ஆண்டு காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சங்கீதா. தற்போது வெளிநாட்டில் இருக்கும் இவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த போட்டோக்களுக்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகிறது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ரெடின் கிங்ஸ்லிக்கு சினிமா மீது ஆர்வம் இருந்ததால், அவள் வருவாளா என்ற படத்தில் க்ரூப் டான்ஸ் ஆடினார். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு படவாய்ப்பு இல்லாததால் சொந்த தொழிலை கவனித்து வந்தார். அப்போது, கல்லூரி காலத்து நண்பரான நெல்சன் சிம்புவை இயக்கிய வேட்டை மன்னன் படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பாதியில் நின்று போனது.

நல்ல பெயர்: இதையடுத்து, மீண்டும் தனது நண்பன் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார். அந்த படம் ரெடின்க்கு சினிமாவில் நல்ல பெயரைப்பெற்றுத்தந்தது. அதையடுத்து, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில், வலிச்சா சொல்லப்போது கோமதி என்று பேசி ரசிகர்கள் மனதில் நச் என்று ஒட்டிக்கொண்டார்.
டாப் நடிகர்களின் படத்தில்: டாக்டர் படத்தைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, ஜெய்லர் படத்திலும், விஜய்யின் பீஸ்ட், சிம்புவின் பத்து தல, விஷாலின் மார்க் ஆண்டனி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவர் படத்தில் வந்தால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற மைன்ட் செட்டுக்கு ரசிகர்கள் வந்துவிட்டதால், பல இயக்குநர்களின் முதல் சாய்சாக ரெடின் இருக்கிறார்.
திடீர் திருமணம்: பல திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கும் ரெடின் கிங்ஸ்லி, நீண்ட நாட்களாக காதலித்து வந்த சீரியல் நடிகை சங்கீதாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்ந்து தெரிவித்தனர். நடிகை சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்றும், 45 வயதாகும் நடிகை சங்கீதாவுக்கு ஷிவ்ஹியா என் மகள் இருக்கிறாள் என்று தகவல் இணையத்தில் பரவியது.
சரியான பதிலடி: மேலும் இவர்களின் திருமணம் குறித்து,லேட் மேரேஜ், இந்த வயசுல கல்யாணம் தேவையா என்று வயது குறித்து தான் பல கமெண்ட்ஸ்கள் இணையத்தில் வலம் வந்தன. இதற்கு பதில் அளித்த சங்கீதா இங்க இருக்கும் மக்களால் இதை புரிந்துக்கொள்ள முடியாது என்பதால் வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிடலாம் என்று தோன்றுகிறது. நாங்கள் இளமையுடன் தான் இருக்கிறோம் என்று நினைத்துக்கொள்ளுவோம். பணத்துக்காக ரெடின் கல்யாணம் பண்ணேன்னு சொல்கிறார்கள், நானும் ஒன்னும் இல்லாமல் வந்தவள் இல்லை. இதற்கு எல்லாம் விளக்கமே கொடுத்துட்டு இருக்க முடியாது என்று பதிலடி கொடுத்திருந்தார்.
தீயாய் பரவும் போட்டோ: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சங்கீதா, தனது கணவருடன் வெளிநாட்டில் செம ரொமான்சாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவிற்கு நெற்றில் முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











