எனக்கு ஒரு துணை தேவை.. எல்லாரும் தப்பா பேசுறாங்க.. நடிகை ரிஹானா பேட்டி!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸில் சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை ரிஹானா.

அதிரடியாக பல கருத்துக்களை துணிந்து சொல்லக்கூடிய பெண்ணாக இவர், சம்யுக்தா, விஷ்ணுகாந்த், திவ்யா ஸ்ரீதர், அர்ணவ் விவகாரத்தில் துணிச்சலான கருத்துக்களை கூறியிருந்தார்.

actress reehana interview about her divorce and second marriage plan

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ரிஹானா இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

நடிகை ரிஹானா பேட்டி: அதில், என்னுடைய முதல் திருமணம் முறிந்து போனது அனைவருக்கும் தெரியும், அண்மையில் தான் எனக்கு விவாகரத்து ஆனது. அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தற்போது தான் கைக்கு கிடைத்து இருக்கிறது. எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். எனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது.

இரண்டாம் திருமணம்: விதவையானாலும், விவாகரத்து ஆன பெண்ணாக இருந்தாலும், இரண்டாவது திருமணம் செய்து கொண்டால். அவர்களை இந்த சமுதாயம் தப்பாகத்தான் பார்க்கிறது. ஆனால், கணவன் இல்லாமல் வாழும் பெண்ணுக்கு பல வகையில் பிரச்சனைகள் வரும். அக்கம் பக்கத்தில் இருக்கும் ஆணுடன் சும்மா பேசினால் கூட, மற்றவர்கள் தவறாக பார்ப்பார்கள்.

அனைவருக்கும் சொல்லுவேன்: நானாக ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டால், ஒருவரோடு அது முடிந்து விடும். அப்படி இல்லை என்றால், என்னை பார்க்கும் அத்தனை பேருடைய கண்களுக்கும் நான் 10 பேருடன் இருப்பது போன்று தான் தெரியும். இதனால், நிச்சயம் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன். அந்த திருமணத்தை நிச்சயம் அனைவருக்கும் சொல்லித்தான் செய்து கொள்வேன்.

கணவர் மிரட்டினார்: மேலும், நான் என்னுடைய கணவரிடம் விவாகரத்து கேட்கவில்லை அவர்தான் விவாகரத்தை கேட்டார். விவாகரத்து தரவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். இதனால், எங்கோ பிரச்சினை இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, நான் விவாகரத்திற்கு ஒத்துக் கொண்டேன். ஆனால் அதையும் இங்கு பல பேர் முடிச்சு போட்டு பேசுகிறார்கள் என்று ரிஹானா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X