புருஷன் சரியில்லனா பொண்டாட்டி வெளியில தான் போவா? ரிஹானாவின் கருத்தால் கிளம்பிய புது சர்ச்சை!

சென்னை: பட்டுக்கோட்டையில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக குற்றம் சாட்டி, தனது மனைவியை ராஜா என்பவர் முகத்தில் கத்தியால் கடுமையாக தாக்கினார். மனைவியை பலமுறை கண்டித்தும் கேட்காததால் இப்படி ஒரு விபரீதம் நடந்துவிட்டதாகவும், தனது குடும்பமே நாசமாகிவிட்டதாகவிட்டது என்று தனது நான்கு வயது மகனுடனுடன் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகை ரிஹானா: இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ரிஹானா தனது கருத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதில் பேசிய அவர், முன்பெல்லாம் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பை நான் வியந்து பார்த்திருக்கிறேன். திருமணம் செய்து கொள்ளாமல், குழந்தை பெற்றுக் கொள்ளாமல் ஒரு ஆணுடன் வாழலாமா என்று கூட யோசித்திருக்கிறேன். ஆனால், இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும்போது லிவிங் ரிலேஷன்ஷிப்பே பரவாயில்லை என்று தோன்றுகிறது. பிடித்திருந்தால் சேர்ந்து வாழலாம். பிடிக்கவில்லை என்றால் பிரிந்து அவரவர் வாழ்க்கையை பார்த்துக் கொள்ளலாம். நான் உனக்கு தாலி கட்டிவிட்டேன், நீ எனக்கு சொந்தமானவள் என்று நினைத்துக் கொண்டு தன்னையும் அழித்து, தன்னை நம்பி வந்த மனைவி, குழந்தையையும் அழித்துவிட்டு உயிர் போவதை விட லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்வது எவ்வளவோ மேல்.

Reehana instagram
Photo Credit:

யாருக்கும் உரிமை கிடையாது: ஒரு பெண் தவறு செய்தாரா, தவறு செய்யவில்லையா என்பது வேறு விஷயம். அதற்காக அவரை அடிக்கவோ, கொல்லவோ யாருக்கும் உரிமை கிடையாது. உயிரைக் கொடுப்பதும் எடுப்பதும் கடவுளின் கையில் மட்டுமே இருக்கிறது. பெண் தவறு செய்துவிட்டால் இப்படித்தான் வெட்ட வேண்டும், இப்படித்தான் கொல்ல வேண்டும் என்று பேசும் ஆண்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறன். இதுபோன்ற விஷயம் உங்கள் வீட்டில் நடந்தால் தான் அதன் வலி புரியும் என்ன என்று தெரியும்.

புருஷன் சரியில்லனா: அந்தப் பெண்ணுக்கும், கணவனுக்கும் இடையே என்ன கருத்து வேறுபாடு இருந்தது என்பது நமக்குத் தெரியாது. அந்தப் பெண் ஏன் தனது கணவனை வெறுத்தார் என்பதும் நமக்குத் தெரியாது. திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு கணவரை வெறுக்கிறார் என்றால், அதற்கு காரணம் கணவன், மனைவி இருவருமே தான். தனக்கு தேவையானதை மனைவி கொடுக்கவில்லை என்றால் ஆண் வெளியில் போகத்தான் செய்வேன். அதேபோல் தனக்கு தேவையானதை புருஷன் கொடுக்கவில்லை என்றால் பெண் வெளியில்போகத்தான் செய்வால். அது ஒரு உணர்ச்சி. அதற்காக உயிரை எடுக்கும் உரிமையை யார் கொடுத்தது? என பேசி உள்ளார். ரிஹானாவின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக திருமண உறவு மற்றும் திருமணத்தை மீறிய உறவுகள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து அவரை கடுமையாக திட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X