இந்த நடிகை யாருனு தெரியுதா? அடையாளமே தெரியாமல் மாறிய விஷால் பட நடிகை!

சென்னை : ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்து இளசுகளின் இதயத்தில் இடம் பிடித்த நடிகை ரீமா சென் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளார்.

1981ம் ஆண்டு பிறந்த ரீமா சென், மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்து ஒரு சில விளம்பரங்களில் நடித்துள்ளார்.

இந்த விளம்பரத்தை தொடர்ந்து சித்ரம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து சினிமாத்துறையில் நுழைந்தார்.

நடிகை ரீமா சென்

நடிகை ரீமா சென்

வசீகரா என் நெஞ்சினிக்க, உன் பொன்மடியில் தூங்கினால் போதும் என்ற பாடலுக்கு பூனை நடைபோட்டு க்யூட்டாக ஆட்டம் போட்ட ரீமா சென். அந்த ஒரே ஒரு பாடலின் மூலம் ஒட்டுமொத்த இளசுகளின் இதயத்தையும் வளைத்துப் போட்டார். தற்போது வரை ரீமா சென் 90ஸ் இளசுகளின் பேவரைட் கதாநாயகி ஆகவே உள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே படத்தையும், மாதவன் மற்றும் ரீமா சென்னின் ரொமான்சையும் என்னைக்கும் மறக்கவே முடியாது.

அடுத்தடுத்த படங்களில்

அடுத்தடுத்த படங்களில்

இன்றைய 2கே கிட்சுகளின் பிளே லிஸ்டிலும் இந்த பாடல் ஆக்கிரமித்துள்ளது. மின்னலே படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, கன்னடம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார் ரீமா சென். செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.

திருமணம்

திருமணம்

பிஸியான நடித்துக்கொண்டிருந்த ரீமாசென் 2012ல் தொழிலதிபர் ஷிவ் கரன் சிங்கை திருமணம் செய்து கொண்டு நடிப்பிற்கு முழுக்கு போட்டார். தற்போது ரீமா சென்னுக்கு ருத்ரவீர் என்ற மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பின் எந்த திரைப்படங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ரீமா சென் தலை காட்டாமலே குடும்பம் குட்டி என செட்டிலாகி விட்டார்.

அடையாளமே தெரியவில்லை

அடையாளமே தெரியவில்லை

சோஷியல் மீடியா பக்கமே வராமல் இருந்த ரீமா சென் தற்போது தான் ஒரு சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.அதில், தனது நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் ரீமா சென் ஆள்அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் எடை கூடி இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த 90ஸ் கிட்ஸ்கள் ரீமா சென்னா இது என வாய்பிளந்து போனார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X