பீச் மணலில் படுத்தப்படி இளம் நடிகருடன் நெருக்கமாக ரெஜினா... லாக்டவுன் நேரத்தில் பரப்படும் ரேர் பிக்!
சென்னை: நடிகை ரெஜினா கேசன்ட்ரோ இளம் நடிகர் ஒருவருடன் பீச்சில் படுத்தப்படி நெருக்கமாக இருக்கும் போட்டோ தீயாய் பரவி வருகிறது.
Recommended Video
நடிகை ரெஜினா கேசன்ட்ரா கண்ட நாள் முதல் என்ற படத்தில் நடிகை லைலாவுக்கு தங்கையாக நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜ தந்திரம், மாநகரம், சரணவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இளம் ஹீரோவுடன்
தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, கசட தபற உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் ரெஜினாவின் ரேர் போட்டோக்கள் என அவர் நடிகர் ஒருவருடன் பீச்சில் இளம் ஹீரோ ஒருவருடன் நெருக்கமாக படுத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

கவுதம் கார்த்திக்குடன்
அதாவது நடிகை ரெஜினா கேசன்ட்ரா நடிகர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தப் படம் மிஸ்டர் சந்திரமவுலி. இந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. தீராத விளையாட்டுப் பிள்ளை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் திரு இந்தப் படத்தையும் இயக்கியிருந்தார்.

பீச்சில் இருவரும்
காமெடி த்ரில்லரான இப்படத்தில் காதல் ஜோடிகளாக நடித்திருந்தனர் ரெஜினாவும் கவுதம் கார்த்திக்கும். அவர்களுக்கான டூயட் பாடலாக ஏதேதோ ஆனேனே என்ற பாடல் இடம் பெற்றது. கடலோரத்தில் காட்சியாக்கப்பட்ட இப்பாடலில் இருவரும் செம க்ளோஸாக நடித்திருந்தனர்.

ரொம் ஹாட்
இந்நிலையில் அப்போது எடுக்கப்பட்ட ஒரு போட்டோதான் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் பீச்சில் இருவரும் நெருக்கமாக படுத்தப்படி உள்ளனர். கவுதம் கார்த்திக்கின் முகத்தில் தன்னுடைய முகத்தை வைத்து பார்க்கவே ரொம்ப ஹாட்டாக இருக்கிறார் ரெஜினா. தற்போது லாக்டவுன் நேரம் என்பதால் பல நடிகைகளின் ஹாட் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











