நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா.. கேரளா சேலையில் அசத்தும் அனுஷா!

சென்னை : நடிகை ரேகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ரேகாவுக்கு இன்று வரை ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ரேகாவின் மகள் அனுஷா கேரளா சேலையில் கொள்ளை கொள்ளும் அழகில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

நீங்கா ரசிகர்களை

நீங்கா ரசிகர்களை

கடலோர கவிதைகள், புன்னகை மன்னன், நினைவே ஒரு சங்கீதம் என காலத்தால் அழிக்க முடியாத பல திரைப்படங்களில் நடித்து இன்றளவும் நீங்கா ரசிகர்களை கொண்டிருப்பவர் நடிகை ரேகா.

முன்னணி ஹீரோக்களுடன்

முன்னணி ஹீரோக்களுடன்

தமிழில் எக்கச்சக்கமான வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார்.

தொலைக்காட்சி தொடர்கள்

தொலைக்காட்சி தொடர்கள்

எந்த ஒரு வேடமாக இருந்தாலும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அற்புத படுத்தி வரும் ரேகா தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகள் என பலவற்றிலும் கலந்து கொண்டதை அடுத்து விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கலந்துகொண்டு அனைவரையும் ரசிக்க வைத்தார்.

அனுஷா -வின் அறிவுரையின்படி

அனுஷா -வின் அறிவுரையின்படி

பிக் பாஸ் சீசன் 4-லும் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனது குழந்தைத்தனமான இயல்பை வெளிப்படுத்தியிருந்த ரேகா தனது மகள் அனுஷா - வின் அறிவுரையின்படியே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறியிருந்தார்.

க்யூட் புகைப்படம்

க்யூட் புகைப்படம்

அதைத்தொடர்ந்து அனுஷாவை பற்றி பலராலும் தேடப்பட்டு வந்த நிலையில் இப்போது அனுஷ்யா கேரளா சேலையில் ரேகாவுடன் இருக்கும் பார்க்கப் பார்க்க திகட்டாத க்யூட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

விரைவில் கதாநாயகியாக

விரைவில் கதாநாயகியாக

ரேகாவின் மகள் அனுஷாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரேகாவுக்கு இப்படி ஒரு அழகான பொண்ணா என வாய் பிளந்து வரும் நிலையில், ரேகாவை போல அனுஷாவும் திரைப்படங்களில் விரைவில் கதாநாயகியாக வருவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Read more about: rekha ரேகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X