40 வயசானாலே நடிகைகளை கறிவேப்பிலை போல தூக்கிப்போடுறாங்க.. நடிகை ரேகா வேதனை!

சென்னை: சினிமாவில் நடிகைகளுக்கு 40 வயதானாலே கறிவேப்பிலை போல தூக்கிப் போட்டுவிடுவதாக நடிகை ரேகா நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ளார்.

கடலோரக் கவிதைகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா.

அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களாக இருந்த கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன் உட்பட பல டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றார்.

Actress Rekha Cute Speech at Miriam Maa Audio Launch

நடிகை ரேகா: தமிழ், மலையாளம், தெலுங்கு பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது முதல் படமான கடலோரக் கவிதைகள் படத்தை யாராலும் மறக்க முடியாது. அதில் டீச்சர் கேரக்டரில் அவ்வளவு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இளசுகளின் வட்டாரத்தை கூண்டோடு கவர்ந்தார். அதை அடுத்து அவருக்கு பெயர் வாங்கித் தந்த படம் புன்னகை மன்னன் இந்தப் படத்தையும் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது

மிரியம்மா: இதன் பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை ரேகா சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து, குக் வித் கோமாளியில் பங்கேற்று மீண்டும் ஒரு ரவுண்ட் வருகிறார். தற்போது இவர், "மிரியம்மா" என்ற படத்தில் கர்ப்பிணியாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் மிரியம்மா திரைப்படத்தில் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நல்ல கதாபாத்திரம்: இப்படத்தில் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய இவர், பாரதிராஜா சார் எப்படி கடலோர கவிதைகள் படத்தில் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்தாரோ அதே போல, மிரியம்மா படத்தில் ஒரு நல்ல கேரக்டர் எனக்கு கிடைத்து இருக்கிறது. இதற்கு காரணமான இயக்குநருக்கு ரொம்ப நன்றி.

கறிவேப்பிலை போல: முன்பு கதாநாயகனுக்கு சரிசமமாக கதாநாயகி பாத்திரம் இருந்தது. ஆனால், அந்த நிலை மாறி தற்போதைய நாயகிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது. 40 வயசானாலே நடிகைகளை கறிவேப்பிலை போல தூக்கிப்போடுறாங்க என்று நடிகை ரேகா அந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X