நான் உன்னுடைய பொண்டாட்டியா?..நான் எப்படி நடிச்சா உனக்கென்ன..பயில்வானை அடிக்க பாய்ந்த ரேகா நாயர்!

சென்னை : பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்த ரேகா நாயர், தன்னை தரக்குறைவாக விமர்சனம் செய்த பயில்வான் ரங்கநாதனை நடுரோட்டில் வைத்து கண்டபடி விளாசி உள்ளார்.

Recommended Video

“நான் டிரெஸ் போடாம நடிச்சா உனக்கென்ன..” பயில்வான் ரங்கநாதனை நடுரோட்டில் பந்தாடிய இரவின் நிழல் நடிகை

வித்தியாச விரும்பியான பார்த்திபன் இயக்கத்தில் உருவான இரவின் நிழல் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. படம் பார்த்த பலரும் பார்த்திபனின் திறமையை பார்த்து வியந்து பாராட்டி வருகிறார்கள்.

வரலக்‌ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா, ரேகா நாயர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை 'அகிரா புரொடக்‌ஷன்ஸ்' தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இரவின் நிழல்

இரவின் நிழல்

இரவின் நிழல் திரைப்படம் கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் Non Linear முறையில் என்பது தான் கூடுதல் சிறப்பம்சம். நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

ரேகா நாயர்

ரேகா நாயர்

இந்த படத்தில் நடிகை பிரிகிடா நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்துள்ளார். அதே போல ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரேகா நாயரும் ஒரு காட்சியில் மேலாடை இன்றி அரைநிர்வாணமாக நடித்திருக்கிறார். இந்த காட்சியை பார்க்கும் போது முகம் சுளிக்கும் அளவுக்கு எந்தவிதமான ஆபாசமும் இல்லை என்று, படத்தை பார்த்தவர்கள் பலர் அவர்களை பாராட்டி வருகின்றனர்.

வரம்பு மீறிய பயில்வான்

வரம்பு மீறிய பயில்வான்

இந்நிலையில்,பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் தன்னுடை யூடியூப் சேனலில் ரேகா நாயர் அரைநிர்வாணமாக நடித்தது குறித்து மிகவும் வரம்பு மீறி பேசியிருந்தார். இந்த ரேகா நாயர், இறந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தோழி, சித்ரா இறந்த போது அவருடைய அறையில் என்னென்ன அந்தரங்க விஷயங்கள் இருந்தது என்று நமக்கு தெரியும். அவருடைய தோழி தானே இவர், நிர்வாணமாக மட்டுமில்லை எப்படி வேண்டுமானாலும் நடிப்பார் அவருக்கு எல்லாமே சகஜம் என்று ரேகா நாயரை மிகவும் கேவலமாக பேசி இருந்தார்.

நான் உன்னுடைய பொண்டாட்டியா?

நான் உன்னுடைய பொண்டாட்டியா?

இந்நிலையில், சென்னையில் உள்ள கடற்கரை பகுதியில் பயில்வான் ரங்கநாதன் உடற்பயிற்சிக்காக சென்று கொண்டிருந்தபோது அங்கே வந்திருந்த ரேகா நாயர் பயில்வான் ரங்க நாதனை வெளுத்து வாங்கினார். சினிமா நடிகைகளை கேவலாக பேசி அதில் பிழைப்பு நடத்துற, அடுத்தவர்களை பற்றிபேசும் நீ, உன் மகன் என்ன பண்றானு தெரியுமா என பயில்வானை அடிக்க பாய்ந்தார். நான் அம்மனாக நடிப்பேன் அதைக் கேட்க நீ யார்..? நான் உன்னுடைய பிள்ளையா.. இல்ல உன் பொண்டாட்டியா நீ யார் என கடும் கோபத்தில் கத்தினார்.

பயில்வானை விளாசிய ரேகா நாயர்

பயில்வானை விளாசிய ரேகா நாயர்

இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அவர்களை சமாதானப் படுத்த முயன்றனர். ஆனால் ,ரேகா நாயர் கோபத்தின் உச்சத்தில் இருந்ததால் சமாதானம் ஆகவில்லை. அதுமட்டும் இல்லாமல் பயில்வான் ரங்கநாதனும், நீ நிர்வாணமாக நடிச்சா அப்படித்தான் பேசுவேன் என்றார். உடனே ரேகா, அப்போ அதைபற்றி பேசவேண்டியது தானே சித்ரா விஷயம் பற்றி ஏன் பேசுனா, உன்னை யாரும் எதுவும் கேட்கமுடியாதுனு நினைப்பா என பயில்வான் ரங்கநாதனை உண்டு இல்லை என்று ஒருவழியாக்கிவிட்டார் ரேகா நாயர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X