Rekha Nair: என் உடம்புக்கு இவ்வளவு தான் தருவியா? அட்ஜஸ்ட்மென்ட் பற்றி ரேகா நாயர் பளீச் பதில்!
சென்னை: சீரியல் நடிகையான ரேகா நாயர், பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர், மேலாடை இல்லாமல் நிர்வாணமாக நடித்திருந்தது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டியளித்த ரேகா நாயர், சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து, வெளிப்படையாகவும் தைரியமாகவும் பேசி இருந்தார். அந்த பேட்டி தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதில், விவேகானந்தரை பற்றியே தவறாக பேசி சந்தேகப்பட்ட ஊர் இது, இதில் என்னை பற்றி என்ன பேசினால் என்ன, நான் எப்போதும் ஒரு ஞான நிலையில் இருக்கிறேன், நீங்கள் எது சொன்னாலும் எனக்கு கேட்காது, உங்களின் எந்த பாராட்டு எனக்கு தேவையில்லை. நீங்களாவே புதிதான ஒரு வார்த்தையை கண்டுபிடித்து சொல்லவில்லை, இந்த சமுதாயம் காலம் காலமாக இங்கு வாழ்ந்த பத்தினி என்று நீங்கள் நினைத்து கொண்டு இருக்கும் பெண்களைவிட எங்களை கொடுமைப்படுத்தி விட்டீர்கள் நீங்கள் சொல்வதால், நான் மாறப்போவதும் இல்லை பயந்து ஒதுங்கப்போவதும் இல்லை. இவை அனைத்தையும் கண்டு கொள்ளாமல், நான் நானாகவே இருப்பேன்.

சினிமாவின் மிகப்பெரிய அரசியல்: அதேபோல சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்மெண்டுகள் குறித்து பேசிய ரேகா நாயர், பட வாய்ப்பு வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தால் அட்ஜஸ்மெண்டுக்கு போங்க. அதுவும் இல்லாமல் படுக்கையின் மீது ஆசை இருந்தால் அதற்காக ஒருவரை கண்டுபிடித்து போங்க, அதைவிட்டு விட்டு நான் வருகிறேன் நீ யாரிடமும் சொல்லிவிடாதே என்று சொல்வது ஏமாற்று வேலை. இதில் அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைப்பவர்கள் அட்ஜஸ்ட்மென்டுக்கு போகிறவர்கள் என இரண்டு பேருமே அனுபவிக்கிறார்கள். இது சினிமா துறையில் நடக்கும் மிகப்பெரிய அரசியல்.
என் உடம்புக்கு எவ்வளவு தருவா: என்னிடம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்வீர்களா என பல பேர் கேட்டு இருக்கிறார்கள் அவர்களிடம், நான் எவ்வளவு கொடுப்பீங்க, இவ்வளவு தான் கொடுப்பீர்களா? என்னுடைய உடம்பிற்கு இவ்வளவுதான் மதிப்பா என்று கேட்டிருக்கிறேன். இப்படி நான் பேச தொடங்கியதுமே எதிரில் இருப்பார்கள் சாரி மேடம் என்று சென்று விடுவார்கள். என் உடலை திறந்து காட்ட வேண்டும் என்று நான் முடிவு செய்து விட்டால், எந்த இடத்தில் வேண்டுமானாலும் திறந்து காட்டுவேன், அதை நீ என்னிடம் திறந்து காட்டு என்று சொல்லக்கூடாது. இந்த சினிமாவிற்கு நான் வந்தது என்னுடைய அழகையும், என்னுடைய திறமையையும் வெளிக்காட்டி அதன் மூலமாக ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக தான் தவிர படுப்பதற்காக இல்லை என்று ரேகா நாயர் அந்த பேட்டியில் சரியாக பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











