ஆண்கள் ரொம்ப பாவம்.. பெண்கள் கொடுமைப்படுத்துகிறார்கள்.. ஆண்களுக்கு வக்காலத்து வாங்கிய ரேகா நாயர்!

சென்னை: சின்னத்திரை நடிகையான ரேகா நாயர், பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பிரபலமானார். இதைத்தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தைரியமாக பல கருத்துக்களை முன்வைத்து பேசி வரும் நடிகை ரேகா நாயர்,யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆண்கள் ரொம்ப பாவப்பட்டவர்கள், பெண்கள் அவர்களை கொடுமைப்படுத்தி வருவதாக கூறியுள்ளார். இதைக்கேட்ட பல பெண்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் தான் பாவப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு பெண் அழுது கொண்டே போலீஸ் ஸ்டேஷன் சென்று, ஆண் மீது கம்ப்ளைன்ட் கொடுத்தால் அந்த பெண்ணுக்கு தான் அங்கு இருப்பவர்கள் ஆதரவாக பேசுவார்கள். ஆனால், அந்த ஆண் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டான், எவ்வளவு துன்புறுத்தலுக்கு ஆளானான் என்று அவர்கள் பேச மாட்டார்கள். ஆண்களின் குரலை கேட்பதற்கான சமூகம் இது இல்லை. ஆண்களின் குறையை யாரும் கேட்பதே இல்லை.

rekha nair interview

ஆண்கள் பாவம்: எத்தனையோ பெண்கள் தனது கணவன்களை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது பலருக்கு தெரியாது.. ஆண்களின் செல்போனை வாங்கி பெண்கள் பார்க்கிறார்கள். இதே ஒரு பெண்ணின் செல்போனை வாங்கி ஆண் பார்த்துவிட்டால், உடனே விவாகரத்து என்று போய் நின்று விடுகிறார்கள். பெண் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றலாம், சினிமாவிற்கு போகலாம், எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் போகலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், கணவன் எங்கே போற என்று கேட்டுவிட்டால், நான் எங்க வேண்டுமானாலும் போவேன் இருக்க இஷ்டம் இருந்தால் இரு, இல்லை என்றால் போய்விடு என்று பெண்கள் துணிந்து பேசுகிறார்கள். பெண்களின் வீட்டிலும், கணவன் திட்டினால், வீட்டுக்கு வந்துவிடு என்கிறார்கள்.

கடுப்பான இணையவாசிகள்: இதை, ஆண்கள் வெளியில் சொல்ல முடியாதபடி தவித்துக்கொண்டு இருக்கிறார்கள், இதனால் தான், ஆண்கள் மிகவும் பாவப்பட்டவர்கள் என்றேன். அவர்களுக்கு சட்ட ரீதியாகவோ, சமூகரீதியாகவோ அவர்கள் மிகவும் பாவப்பட்டு தான் இருக்கிறார்கள் என்று ரேகா நாயர் அந்த பேட்டியில் ஆண்களுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.இந்த வீடியோவைப் பார்த்த பெண்கள், யாரோ ஒரு பெண் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்தமாக அனைவரையும் சொல்லுவது தவறு என்றும், இப்போதும் பல பெண்கள் ஆண்களால் பல கொடுமைகளை அனுபவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

rekha nair interview

சீரியல் நடிகையான நடிகை ரேகா நாயர், வம்சம், பகல் நிலவு, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் பால கணபதி போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இதையடுத்து, இரவின் நிழல் திரைப்படத்தில், அரை நிர்வாணமாக நடித்திருந்தார். இதுபற்றி, பயில்வான் ரங்கநாதன் தனது youtube சேனலில், பார்த்திபன் ஒருபக்க மார்பகத்தை காட்ட சொன்னால், ரேகா இரண்டு மார்பகத்தையும் காட்ட ரெடி என்று சொன்னதாக கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நடிகை ரேகா நாயர், பயில்வான் வாக்கிங் செல்லும் திருவான்மியூர் கடற்கரைக்கே நேரடியாக சென்று அவரை நேரடியாக சந்தித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது அப்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X