சினிமாவில் ஜெயிச்சாரு.. அரசியலில் ஜெயிச்சாரு.. ஹெல்த்ல தோத்துட்டாரே.. விஜயகாந்த் பற்றி பேசிய ரேகா!
சென்னை: விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஹீரோக்கள், இயக்குநர்கள், நடிகர்களை தாண்டி அதிகளவில் நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய நடிகை ரேகா தனது மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகைகள் தேவயாணி, ரேகா உள்ளிட்ட பலர் விஜயகாந்த் படத்தில் நடித்தது பற்றியும் அவரை பற்றியும் பல விஷயங்களை பேசியுள்ளனர். கமல்ஹாசன், விஷால், விக்ரம், கார்த்தி, எம்.எஸ். பாஸ்கர், நாசர், ராதா ரவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் மேடைக்கு வந்து புகழஞ்சலி செலுத்தினர்.

தேவயாணி பேச்சு: நடிகர் சங்கத்தை சீக்கிரமா கட்டுங்கன்னு கேப்டன் விஜயகாந்த் சொல்வது போலத்தான் அவர் புகைப்படம் இங்கே இருக்கிறது என்றும் விஜயகாந்த் கேப்டன்ஷிப்பில் நடிகர்கள் எல்லாம் குடும்பமாக இருந்தோம். ஆனால், இப்போ அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. சீக்கிரமா நடிகர் சங்கத்தை கட்டிட்டு எல்லோரும் குடும்பமாக அங்கே உள்ளே செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
வெளிப்படையாக பேசிய ரேகா: வெள்ளை வேட்டி, சட்டை விஜயகாந்துக்குத்தான் அப்படி பொருந்தும். நல்லா நடி ரேகா என தைரியம் கொடுத்தார் விஜயகாந்த். தந்தை இழந்த பின்னர் அழுததே கிடையாது. விஜயகாந்த் மகன்களை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஒரு படத்துல என்னை குதிரை மேல ஏற்றி விட்டு ஓட வைத்து விட்டார். நான் நிறுத்துங்க நிறுத்துங்க என சொல்லி பயந்தேன். அவர், அதெல்லாம் பயப்படாதீங்க என சொல்லி எனக்கு தைரியம் கொடுத்து குதிரையேற்றத்தையே கத்துக் கொடுத்தார் என பேசினார்.
ஹெல்த் ரொம்ப முக்கியம்: அதன் பின்னர் விஜயகாந்த் நடிப்புல ஜெயிச்சிட்டாரு, அரசியலில் ஜெயிச்சிட்டாரு.. ஆனால், ஹெல்த்ல தோத்துட்டாரு.. பொது வாழ்க்கையில் ஈடுபடுற பலரும் தங்களோட சொந்த உடம்பை கவனித்துக் கொள்ளத் தவறிவிடுகின்றனர். அதான் சொல்றேன் எல்லாரும் ஹெல்த்தை நல்லா பார்த்துக்கோங்க அதுதான் உங்களை நல்லா வச்சிக்கும் என ரேகா பேசியுள்ளார்.
நடிகர் சங்கத்துக்கு கோரிக்கை: கேரளாவில் அம்மா என ஒரு சங்கம் இருக்கு, அதில் நலிவடைந்த கலைஞர்களுக்கு எல்லாம் மாதம் தோறும் நிவாரணத் தொகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இங்கே இரு வேறு பிரிவுகள், தேர்தல், கொரோனா என ஏகப்பட்ட விஷயங்கள் காலத்தை கடத்தி விட்டன. இனிமேல் அதெல்லாம் இல்லாமல் நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவ முன் வரவேண்டும் என நடிகர் சங்கத்துக்கும் ரேகா கோரிக்கை வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











