பிக்பாஸில் என்ட்ரி கொடுத்த மூத்த நடிகை ரேகா.. காமெடி பீஸ்னு பேரு வாங்கிடுவேன் என சூளுரை!
சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகை ரேகாவும் பங்கேற்றுள்ளார்.
நடிகை ரேகா 1990களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கமல், சத்யராஜ், ராமராஜன், விஜயகாந்து உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார். சில சீரியல்களிலும் நடித்துள்ளார் நடிகை ரேகா.

மிரண்ட கோமாளிகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ரேகா, தன்னுடன் இருந்தவர்களை பாடாய் படுத்தினார். இதனால் அவருடன் சமையல் செய்யவே கோமாளிகள் மிரண்டனர்.

களேபரங்கள்
இதனை பார்த்து ரேகா பிக்பாஸ் வீட்டிற்கு பொருத்தமானவர் என்று எண்ணிய பிக்பாஸ் அவரை, ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளார். ரேகாவால் பிக்பாஸில் பல களேபரங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெடி பீஸ்
பிக்பாஸ் மேடையில் கமலுடன் பேசிய நடிகை ரேகா, தான் இந்த வயதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதற்கான காரணத்தை கூறியுள்ளார். மேலும் தனது மகள்தான் தன்னை தாயை போல் கவனித்துக் கொள்வதாக கூறிய ரேகா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அடாவடி என எடுத்த பெயரை காமெடி பீஸ் என மாற்றுவேன் என்றார்.

ஊர்வசி வாழ்த்து
நடிகை ரேகாவுக்கு நடிகை ஊர்வசி வீடியோ மெஸேஜ் அனுப்பினார். அதில் புதிய நண்பர்களை சேர்த்துக் கொள்ளுமாறு கூறியதோடு என்ஜாய் பண்ணுமாறும் வாழ்த்தினார். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ரேகாவை சனம் ஷெட்டி கட்டியணைத்து வரவேற்றார். ரியோ கைகுலுக்கி வரவேற்றார்.


Click it and Unblock the Notifications











