பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகாவின் முதல் பதிவு.. ரெண்டு செல்லக்குட்டீஸ்க்கு உம்மா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நடிகை ரேகாவின் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நடிகை ரேகா இரண்டாம் வாரமான நேற்று வெளியேறினார்.
முதல் வாரம் எவிக்ஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாய் வெளியேறினார்.

மகள் ஃபீல்
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரேகாவை ஹவுஸ்மேட்டுகள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர். பிக்பாஸ் வீட்டில் ஷிவானியிடம் தனக்கு தன்னுடைய மகள் ஃபீல் இருந்ததாக கூறி கண்ணீர்விட்டார் ரேகா.

கதறி அழுத ஷிவானி
இதேபோல் பாலாஜி முருகதாஸிடமும் நெருக்கமாக இருந்த ரேகா இருவரையும் மிஸ் பண்ணுவதாக கூறினார். ரேகா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதை தாங்கமுடியாமல் ஷிவானி கண்ணீர் விட்டு கதறி அழுததும் பாலாஜி சோகமே உருவாக இருந்ததும் சக போட்டியாளர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஷிவானிக்கு காய்ன்
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போது, வீட்டிற்குள் செல்லும் போது கொண்டு சென்ற செடியை ரியோவிடம் கொடுத்தார் ரேகா. அதனை தொடர்ந்து தனது உண்டியலை உடைத்த ரேகா அதில் இருந்த காய்னை ஷிவானியிடம் கொடுத்தார்.

ரேகா பதிவு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறும் எபிசோட் ஒளிப்பரப்பாகும் முன்பே தான் எலிமினேட் ஆகிவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோவை ஷேர் செய்து அறிவித்திருந்தார் ரேகா. இந்நிலையில் நடிகை ரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார்.

செல்லக்குட்டிஸ்..
அதில் ஷிவானி மற்றும் பாலாஜியின் போட்டோக்களை ஷேர் செய்து நொறுங்கிப் போன இதயங்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் உங்கள் இருவரையும் நேசிக்கிறேன், மோசமாக மிஸ் பண்றேன் செல்லக்குட்டிஸ்.. உம்மா என கேப்ஷன் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











