நான் சாகவில்லை.. தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்.. வெகுண்டெழுந்த நடிகை ரேகா.. என்ன ஆச்சு?

சென்னை: மூத்த நடிகை ரேகா தன்னை பற்றி வெளியாகி வரும் வதந்திகளுக்கு பதில் அளித்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரேகா. கடலோர கவிதைகள், புன்னகை மன்னன் படம் மூலம் கோலிவுட்டில் இவர் முக்கிய நடிகையாக உருவெடுத்தார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் ஊட்டியில்தான் வளர்ந்தார். அதேபோல் இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.

என்ன மொழி

என்ன மொழி

சில வருடங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து இருந்த இவர் மீண்டும் தீவிரமாக நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிக்கும் 100% காதல் படத்தில் நடிகை ரேகா நடித்து உள்ளார். இதன் மூலம் தமிழில் மீண்டும் அதிக படங்களை நடிக்க ரேகா முடிவு செய்துள்ளார்.

என்ன மரணம்

என்ன மரணம்

இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரேகா சில முக்கிய விஷயங்களை குறிப்பிட்டார். அதில், நான் இங்கு இருப்பவர்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். நான் இறந்துவிட்டதாக சில யூ டியூப் சேனல்களில் செய்திகள் வருகிறது. என்னை வைத்து வதந்தி பரப்புகிறார்கள். அடிக்கடி நிறைய வீடியோ வெளியாகிறது.

என்ன பேசினார்

என்ன பேசினார்

நான் இறந்து எனக்கு பெரிய நடிகர் அஞ்சலி செலுத்துவது போல சித்தரித்துள்ளனர். இதனால் பலர் எனக்கு போன் செய்து விசாரிக்கிறார்கள். எனக்கு எதுவும் ஆகவில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். யார் யாரோ யூ டியூப் சேனல் தொடங்கி இப்படி என்னை பற்றி பேசுகிறார்கள். அவர்களின் வருமானத்திற்காக இப்படி தவறாக செய்கிறார்கள்.

பொறுப்பு இல்லை

பொறுப்பு இல்லை

கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் அவர் இப்படி செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னிடம் சிலர் போன் செய்து செத்து போய்ட்டியா நீ என்று கேட்டார்கள். அவர்களிடம் சிரித்துக் கொண்டே, ஆம், செத்துட்டேன்.. இப்போ பேய் தான் பேசுகிறேன் என்று கிண்டலாக குறிப்பிட்டேன்.

இப்படியா

இப்படியா

நான் பாட்டுக்கு அமைதியாக இருக்கிறேன். என்னை ஏன் தொந்தரவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் போயிட்டா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்' என்று விஜய் சார் சொன்னதை கேட்டு, அதை போலவே அமைதியாக இருக்கிறேன்.

ஏன் இப்படி எல்லாம்

ஏன் இப்படி எல்லாம்

என்னை பற்றி ஏன் தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. என் உறவினர்கள் இதனால் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று தெரியுமா? இதன் மூலம் சம்பாதிக்கும் பணம் எல்லாம் எதற்கு? இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். என்று ரேகா குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: rekha ரேகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X