Just In
- 1 hr ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 1 hr ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 2 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 2 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- Automobiles
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- News
தமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா? வேல்முருகன் கடும் கண்டனம்
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அப்பாவ பத்தி சொல்லல.. அவரை ஒழுங்கா பார்த்துக்கல.. இறந்துட்டாரு.. கதறிய ரேகா.. சமாதானம் செய்த சனம்!
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக எவிக்ட் ஆன நடிகை ரேகா, மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நேற்று நுழைந்தார்.
ஆகா.. அர்ச்சனா போட்ட மந்திரம் வேலை செய்யுது போலயே.. ஆரியிடம் எகிறும் ரியோ!
இந்நிலையில், தனது அப்பா குறித்து உருக்கமாக பேசி கதறி அழும் புரமோ வெளியாகி உள்ளது. முதல் ஆளாக தலைவி சனம் ஷெட்டி அவருக்கு ஆறுதல் சொல்வதை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சுச்சியை கண்டுக்கல
இன்றைய முதல் புரமோவில் சம்யுக்தாவின் என்ட்ரியும், பாலாவை குழந்தைன்னு கொஞ்சுவதையுமே பிக் பாஸ் எடிட்டர் ஃபோகஸ் செய்து இருந்தார். சம்யுக்தாவுக்கு முன்னதாக சுச்சி பாலாவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை பிக் பாஸ் எடிட்டரே பொருட்டாக மதிக்கவில்லை.

அதிகபிரசங்கி ரியோ
இரண்டாவது புரமோவில் கேபி ஆரியிடம் ஏதோ டீம் பிரிக்க பேசும் போது, கேபி 4 தடவை ஓகேவான்னு கேட்டும் ஏன் சொல்லல என ஆரியிடம் அதிகபிரசங்கித்தனமாக ரியோ பேசும் காட்சிகள் இடம்பிடித்து ரசிகர்களை காண்டாக்கி உள்ளது. அன்பு கேங் மீண்டும் ஃபார்ம் ஆனதும் ரியோவுக்கு தலை கால் புரியவில்லை என்றே தோன்றுகிறது.

ரேகாவின் சோகக் கதை
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோ எதுக்கு என்றே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் முதல் ஆளாக வெளியேறிய நடிகை ரேகா, கடந்து வந்த பாதையில் தனது அப்பாவை பற்றி பேசாதது ரொம்பவே தன்னை கஷ்டப்படுத்துவதாகவும் அப்பாவை மிஸ் செய்ததும் என தனது சோகக் கதையை மீண்டும் கூறி அழுகிறார்.

கதறி அழுத ரேகா
நடிகையான பிறகு, அம்மாவை கூடவே அழைத்துச் செல்வேன். எங்க அப்பாவை இருவருமே கவனமாக பார்த்துக் கொள்ள முடியவில்லை. அப்பா அப்படியே இறந்துவிட்டார் என எத்தனையோ வருஷ பழைய சோகக் கதையை இப்போ ஏன் பிக் பாஸ் வீட்டில் சொல்லி ரேகா கதறி அழுகிறார் என நெட்டிசன்கள் கடுப்பாகி வருகின்றனர்.

ஆறுதல் சொன்ன சனம்
இரண்டாவது புரமோ மற்றும் மூன்றாவது புரமோவில் சனம் ஷெட்டியை காட்டிய பிக் பாஸ் எடிட்டர். அவர், பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் காட்சியையும், அவர் என்ன பேசுகிறார் என்பதையும் காட்டவில்லை. கதறி அழும் ரேகாவுக்கு முதல் ஆளாக சென்று சனம் ஆறுதல் சொல்லும் காட்சி மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.