Rekha:ஒன்றல்ல ரெண்டல்ல பல காதல்.. பெண் செயலாளருடன் ரகசிய உறவு.. பாலிவுட் நடிகை ரேகாவின் மறுபக்கம்!
சென்னை: பாலிவுட் நடிகை ரேகாவின் 69வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நடிகை ரேகாவின் மறுபக்கத்தை விரிவாக பார்ப்போம்.
தமிழ் திரையுலகில் காதல் மன்னன் என்று அனைவராலும் கொண்டாடப்பட்ட ஜெமினி கணேசனின் மகள் தான் பானு ரேகா.
பாலிவுட் திரையுலகில் இவரை ரேகா என்று அன்போடு அழைத்து வருகின்றனர். 40 வருடத்திற்கு மேலாக பாலிவுட்டில் கலக்கி வரும் ரேகா, சுமார் 180 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ரேகா: 80 மற்றும் 90 காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகை ரேகா, ஃபிலிம்ஃபேர் விருது, தேசிய விருதினையும் வென்று, இன்றளவும் ஹிந்தி திரையுலகில் தனக்கு என்று தனி இடத்தை பெற்றுள்ளார். அமிதாப் பச்சன், வினோத் மெஹ்ரா, ஜித்தேந்திரா, சத்ருகன் சின்ஹா, அக்ஷய் குமார், சஞ்சய் தத், கமல்ஹாசன் என பல நடிகர்களின் காதல் கிசுகிசுவில் இவரின் பெயர் அடிப்பட்டது.
ரேகா-ஜீதேந்திரா: பாலிவுட் நடிகையான ரேகாவுடன் முதன் முதலில், ஜீதேந்திரா இணைத்து பேசப்பட்டார். இருவரும் பல இடங்களில் சுற்றித்திரிந்தனர். ஜீதேந்திரா ரேகாவை சந்திக்கும் முன்பே அவருக்கு ஷோபா கபூர் என்பவருடன் திருமணம் நடந்து இருந்தது. இவர்களின் விவகாரம் மனைவிக்கு தெரிந்ததை அடுத்து ரேகா மற்றும் ஜீதேந்திரா இருவரும் பிரிந்தனர்.

கிரண் குமாருடன் காதல்: இதையடுத்து பிரபல வில்லன் நடிகரான கிரண் குமாருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். ஆனால், இவர்களுடைய காதல் குறுகிய காலத்திலேயே முடிந்துவிட்டது. இதையடுத்து,ரேகா, வினோத் மெஹ்ராவுடன் இணைந்து பேசப்பட்டார். இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக பாலிவுட்டில் செய்திகள் பரவியது. ஆனால், வினோத்தின் தாயார் ரேகாவை வீட்டை விட்டு விரட்டியதால் இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், ரேகா 2004 ம்ஆண்டு அளித்த பேட்டியில், வினோத்துடன் எந்த திருமண உறவும் இல்லை என மறுத்து இருந்தார்.
அமிதாப் பச்சனுடன் காதல்: அமிதாப் பச்சனுடன் தோ அஞ்சானே படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதல் வயப்பட்டனர். இதையடுத்து பல படங்களில் இருவரும் ஒன்றாக ஜோடிப்போட்டு நடித்து வந்தனர். இந்த சூழ்நிலையில், ஜெயா பச்சனுடன் அபிதாப் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் ஜெயா பச்சன், அபிதாப்பை, ரேகாவுடன் இணைந்து நடித்த அனுமதிக்கவில்லை.
தொழிலதிபரை மணந்தார்: இப்படி பல நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்கிய இவர், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் முகேஷ் அகர்வாலை காதலித்து மணந்தார். ஆனால், கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த முகேஷ் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகும், அக்ஷய் குமார், சஞ்சய் தத் என நடிகர்களுடன் இணைத்து பேசப்பட்டார்.

பெண் செயலாளருடன் உறவு: இதையடுத்து நடிகை ரேகா தனது பெண் செயலாளர் பர்சானாவுடன் உறவில் இருப்பதாக வதந்திகள் பரவின. நடிகையின் சுயசரிதை புத்தகமான ரேகா: தி அன்டோல்ட் ஸ்டோரியில், ரேகா குறித்து யாருக்கும் தெரியாத பல விஷயங்களை யாசிர் உஸ்மான் வெளிப்படையாக எழுதி உள்ளார். அதில் நடிகை ரேகா தனது பெண் செயலாளரான பர்சானாவுடன் உறவில் இருந்தார். ரேகாவின் படுக்கையறைக்குள் நுழையக்கூடிய ஒரே நபர் பர்சானா தான் என்றும், அவர்கள் இருவரும் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஒன்றாக இருந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











