பாரதிராஜா யாருன்னே தெரியாது.. கமல் கொடுக்குற கடலை உருண்டை ரொம்ப பிடிக்கும்.. கலகலத்த ரேகா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ரேகா பகிர்ந்து கொண்ட அவரது கடந்த கால அனுபவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Recommended Video

Interesting Things Happened in Big Boss | Top Five Beats

மூத்த நடிகையான ரேகா பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். தொடக்கத்திலேயே ஸ்ட்ரிக்ட்
ஆபிசர் என்ற பெயரை பெற்றுவிட்டார் ரேகா.

இருந்த போதும் எல்லோருடனும் ரொம்பவே நெருக்கமாக இருந்து வருகிறார்.

ரேகா பகிர்ந்த சுவாரசியம்

ரேகா பகிர்ந்த சுவாரசியம்

இந்நிலையில் இன்றைய எபிசோடில் தன்னுடைய கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் நடிகை ரேகா. அப்போது தான் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தது எப்படி என்பது குறித்த அனுவங்களை அழகாய் சொன்னார்.

பாரதிராஜா தெரியாது

பாரதிராஜா தெரியாது

அவர் கூறியதாவது, குடும்ப நண்பர் ஒருவரிடம் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டேன். அவர் நல்ல நேரத்தில் தான் கேட்கிறாய், பாரதிராஜா படத்தில் நடிக்க ஆள் தேவை என்றார். எனக்கு பாரதிராஜா யார் என்றே தெரியாது என்றேன். அவர் பெரிய இயக்குநர், பல படங்களை கொடுத்திருக்கிறார் என்றார்.

இளையராஜா தெரியாது

இளையராஜா தெரியாது

சரி என்று.. சென்னைக்கு வந்தோம்.. பாரதிராஜா சாரிடம் அழைத்து சென்றார்கள், என்ன படம் பார்த்திருக்க என்று கேட்டார். நான் படமெல்லாம் பார்த்ததே இல்லை என்றேன். இளையராஜா தெரியுமா என்றார். எனக்கு இளையராஜா பாரதிராஜாவெல்லம் தெரியாது என்றேன்.

அட்வான் பணம் கொடுத்தார்

அட்வான் பணம் கொடுத்தார்

சரி ஒரு எறும்பு போறதாய் நினைத்து எறும்பு போவதை பார் என்றார். நானும் பார்த்தேன்.. ஓகே நாளை மறுநாள் வைஸாக் போகிறோம் என்று கூறி அட்வான்ஸ் பணத்தை கொடுத்தார். அப்படித்தான் சினிமா வாழ்க்கை தொடங்கியது. தானாகதான் சினிமாவில் வந்தேன். இளையராஜா இசையில் 40 படங்கள் பண்ணியிருக்கேன்.

க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் இல்லை

க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் இல்லை

என் வீட்டு வேலைக்காரார் குழந்தையை பார்த்துக்கொண்டவர் என எல்லோரும் எனக்கு உதவினார்கள். ஆனால் சினிமாவில் எனக்கு க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் என யாரும் இல்லை. என்னிடம் பேசுவார்கள் பழகுவார்கள் ஆனால் எதுவும் சொல்லியெல்லாம் கொடுக்க மாட்டார்கள். யாரும் என் வீட்டுக்கு வந்ததில்லை. நானும் யார் வீட்டுக்கும் போனதில்லை.

பிரபு வீட்டு சாப்பாடு

பிரபு வீட்டு சாப்பாடு

நடிகர் பிரபு வீட்டில் இருந்து வரும் சாப்பாட்டை பலமுறை சாப்பிட்டிருக்கிறேன். நான் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டு போகும் ஸ்னாக்ஸ்களை எல்லா ஹீரோக்களும் வாங்கி சாப்பிட்டிருக்கிறார்கள்.

கடலை உருண்டை

கடலை உருண்டை

கமல் சாருடன் நடிக்கும் போது, அவர் புரெடெக்ஷனில் கடலை உருண்டை வரும். அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும். குணா படத்தின் போதெல்லாம் அப்படி சாப்டிருக்கேன். கமல் சார் முடிந்தால் இப்போது கொடுங்கள். நிஷாவுக்கு மட்டும் கொடுக்காதீர்கள். எனக்கு கொடுங்கள் இங்கு இருக்கும் எல்லோருக்கும் கொடுங்கள்.

ஜட்ஜ் பண்ண வரல

ஜட்ஜ் பண்ண வரல

நான் இங்கு இப்படி ஜாலியாய் இருக்கதான் வந்தேன். யாரைப்பற்றியும் யாரும் ஜட்ஜ் பண்ண இங்கு வரல.. எல்லாரும் ஹேப்பியா இருங்க.. நான் அதிகம் பேசக்கூடாதுன்னு நினைச்சேன். ஆனா நிறைய பேசிட்டேன்.. நான் ஒரு லொட லொடதான்.. ஐ லவ் யூ ஆல்.. எல்லாருக்கும் நன்றி... இவ்வாறு பேசி முடித்தார் ரேகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X