Reshma Pasupuleti: என்னோட திருமண போட்டோஷுட் ரியல் கிடையாது.. விளக்கம் கொடுத்த ரேஷ்மா பசுபுலேட்டி!

சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஷ்மா பசுபுலேட்டி திருமண போட்டோஷுட் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

இந்தப் போட்டோஷுட் ஏராளமான லைக்ஸ்களையும் கமெண்ட்ஸ்களையும் பெற்ற நிலையில், ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.

இந்நிலையில் இந்த போட்டோஷுட் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி.

Actress Reshma pasupuleti explains about her Marriage photoshoot

திருமண போட்டோஷுட் குறித்த வதந்திகளுக்கு ரேஷ்மா விளக்கம்: நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சின்னத்திரையில் பாக்கியலட்சுமி, சீதாராமன் ஆகிய தொடர்களில் மாஸ் காட்டி வருகிறார். குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியல் இவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அர்பன் கேட்டகரியில் தொடர்ந்து முதலிடத்தை இந்தத் தொடர் பிடித்துவரும் சூழலில், முதன்மை கேரக்டரில் நடித்துவரும் ரேஷ்மாவிற்கு மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. இந்த சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் நாயகன் கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்துவருகிறார் ரேஷ்மா.

ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சீதாராமன் தொடரிலும் ஹீரோவின் அம்மாவாக, மருமகளை பிடிக்காத மாமியாராக லீட் கேரக்டரில் நடித்து வருகிறார் ரேஷ்மா. முன்னதாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ரேஷ்மா. புஷ்பா புருஷனாக சூரிக்கு ஏற்படும் பிரச்சினைகள் இந்தப் படத்தில் காமெடியாக எடுத்து சொல்லப்பட்டிருக்கும். இதனிடையே அடுத்தடுத்து இதே போன்ற கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததால் சினிமாவில் நடிப்பதை தான் தவிர்த்ததாக முன்னதாக பேட்டியொன்றில் ரேஷ்மா தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து விலங்கு என்ற வெப் தொடரிலும் ரேஷ்மா நடித்து சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார். தற்போது சீரியல்களில் நடிப்பதில் முழு கவனத்தையும் செலுத்திவரும் ரேஷ்மா, சமூக வலைதளங்களில் மிகுந்த ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அவரது இயல்பான போட்டோஷுட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண போட்டோஷுட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் ரேஷ்மா.

இந்த போட்டோஷுட்டில் நடிகர் நரேஷுடன் இணைந்து போஸ் கொடுத்திருந்தார் ரேஷ்மா. முன்னதாக நடிகர் நரேஷ், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு இந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ரேஷ்மா இந்தப் புகைப்படங்களை மீண்டும் ஷேர் செய்திருந்தது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில் தற்போது இந்தப் புகைப்படங்கள் குறித்து ரேஷ்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த போட்டோஷுட் திருமண மேகசின் ஒன்றிற்காக ஒரு ஆண்டிற்கு முன்னதாக எடுக்கப்பட்டது என்றும் உண்மையான போட்டோஷுட் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த விளக்கத்தின்மூலம் கடந்த இரு தினங்களாக உலவிவந்த பல்வேறு வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த வீடியோவில் தன்னுடைய நடிப்பில் வெளியான 3.33 படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளதாகவும் அதேபோல வரும் 21ம் தேதி தன்னுடைய நடிப்பில் உருவாகியுள்ள சத்தியசோதனை படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாகவும் இந்தப் படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X