பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முன்னணி நடிகை.. இது என்ன புது ட்விஸ்டா இருக்கே!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடர்ந்து பரபரப்பான பல தருணங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.
கோபி -பாக்கியா மற்றும் ராதிகா என மூன்று கேரக்டர்கள் மற்றும் அவர்களையொட்டிய கதைக்களத்தில் இந்த சீரியல் விறுவிறுப்பாக பயணம் செய்து வருகிறது.
கோபியின் இரண்டாவது திருமணம் மற்றும் அதன்மூலம் ஏற்படும் பிரச்சினைகளை இந்த சீரியல் முன்னெடுத்து வருகிறது.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்தத் தொடரில் கோபி -பாக்கியா மற்றும் ராதிகா கேரக்டர்களை சுற்றியே கதைக்களம் காணப்படுகிறது. பேரன் எடுக்கும் வயதில் கோபி கேரக்டரின் இரண்டாவது திருமணம், ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபியின் இரண்டாவது திருமணம்
தன்னுடைய வாழ்க்கையை தான் வாழவே இல்லை என்று இதற்கு விளக்கம் அளித்துள்ளார் கோபி. தன்னுடைய மனைவியை ஏமாற்றி விவாகரத்து வாங்க முயன்றதில் இருந்து பல்வேறு வில்லத்தனங்களை அவர் அரங்கேற்றி வந்த நிலையில், தற்போது தன்னுடைய இரண்டாவது திருமணத்தை தொடர்ந்து அவரது பாடு திண்டாட்டமாக மாறியுள்ளது.

ராதிகா கேரக்டரில் ரேஷ்மா
ஒருபுறம் தன்னுடைய இரண்டாவது மனைவியிடம் மாட்டி அவர் திணறுவதும், மறுபுறம் தன்னுடைய குடும்பத்தினரை சமாளிப்பதுமாக அவரது நாட்கள் திணறலுடன்தான் கழிகிறது. இந்தத் தொடரில் ராதிகா கேரக்டரில் முன்னதாக ஜெனிபர் நடித்து வந்த நிலையில், அவர் சீரியலில் இருந்து விலகினார். தொடர்ந்து அந்த கேரக்டரில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

சீரியலில் இருந்து விலகும் ரேஷ்மா?
இந்நிலையில் இந்த தொடரிலிருந்து ரேஷ்மாவும் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றொரு சேனலில் புதிய சீரியலில் முக்கியமான கேரக்டரில் கமிட்டாகியுள்ளதால் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் ஏமாற்றம்
ராதிகா என்ற கேரக்டரில் ரேஷ்மா பசுபுலேட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். நல்லவராகவும் வில்லத்தனத்திலும் அவர் கலக்கி வருகிறார். கோபிக்கு குடைச்சல் கொடுப்பதிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தொடரிலிருந்து விலகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

புதிய ராதிகா
இந்தக் கேரக்டரில் அடுத்ததாக சர்ச்சைக்கு பஞ்சமில்லாத வனிதா விஜயகுமாரை நடிக்க வைக்க சீரியல் குழு திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வனிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











