சரி குத்து.. சரங்க தரியா பாட்டுக்கு செம ஆட்டம்… ரேஷ்மாவின் வைரல் வீடியோ!

சென்னை : நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி கவர்ச்சியான ஒரு குத்தாட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரையில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது கவர்ச்சியை கொஞ்சம் தூக்கலாகவே காட்ட தொடங்கி உள்ளார்.

தற்போது இவர் அப்லோடு செய்துள்ள வீடியோ வேறலெவலில் வைரலாகி வருகிறது.

தொகுப்பாளினியாக

தொகுப்பாளினியாக

சன் தொலைக்காட்சியில் சன் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார் ரேஷ்மா பசுபுலேட்டி. இதையடுத்து சன்டிவியில் மிகவும் வெற்றி பெற்ற தொடரான வாணிராணியில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதில் பிரபலமானதை அடுத்து பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

புஷ்பா கதாபாத்திரம்

புஷ்பா கதாபாத்திரம்

விஷ்ணு விஷால் மற்றும் நிக்கி கல்ராணி நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் தான் நடித்திருப்பார் இருப்பினும் இவரது கதாபாத்திரத்தின் பெயர் படத்தின் காட்சிக்கு காட்சி இடம் பெற்று இவரை பலருக்கு அறிமுகப்படுத்தியது.

Recommended Video

எனக்கு உன்னோட OPINION தேவையில்ல | Reshma Befitting Reply to BODY SHAMERS
42 நாள் இருந்தார்

42 நாள் இருந்தார்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல், 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அந்த வீட்டில் சுமார் 42 நாட்கள் இருந்த இவர் பின் எவிக்சன் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் சீசன் 3ல் முகேன் ராவ் வெற்றி பெற்றார்.

செம குத்தாட்டம்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி, அவ்வப்போது கிறங்கடிக்கும் புகைப்படத்தை அப்லோடு செய்து வருகிறார். தற்போது, லவ் ஸ்டோரி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சரங்க தரியா பாடலுக்கு செமயா குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 69 ஆயிரம் பார்த்து ரசித்துள்ளனர்.

நாகவல்லியாக

நாகவல்லியாக

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா, கண்ணான கண்னே ஆகிய சீரியலில் நடித்து வருகிறார். அதேபோல, விஜய் டிவியில் அனைவரின் வரவேற்பை பெற்ற, வரலாற்று பின்னணி கொண்ட வேலம்மாள் தொடரில் நாகவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X