‘கிஸ்’ல இப்படி ஒரு விஷயம் இருக்கா.. அந்தரங்க விஷயத்தை தொகுத்து வழங்கும் டிவி நடிகை!
சென்னை: சின்னத்திரை, வெள்ளித்திரை என பரபரப்பாக நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, யூடியூப் சேனல் ஒன்றில் அந்தரங்க விஷயம் குறித்து அலசி ஆராய்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில் நெட்டிசன்கள் தங்களது கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் டெக்ஸாஸ் நகரில் தனது பட்டப்படிப்பை முடித்த பிரசாத் பசுபுலேட்டி, தெலுங்கு சினிமாவில் பல நல்ல திரைப்படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான மகள் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான சீரியல்களில் ஒன்றாகும். இந்த சீரியலைத் தொடர்ந்து ஜீ தமிழ் டிவியில் சீதா ராமன் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ரேஷ்மா பசுபுலேட்டி: 2015ம் ஆண்டு மசாலா படம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இதைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படத்தில் புஷ்பா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும், படம் முழுவதும் புஷ்பா .. புஷ்பா என இவர் பற்றித்தான் பேச்சாக இருக்கும். ரேஷ்மாவுக்கு இந்த படம் மிகப் பெரிய வரவேற்பையும் பெயரையும் பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அந்தரங்க விஷயம்: சின்னத்திரையில் முக்கிய நடிகையாக வலம் வரும் ரேஷ்மா, எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி தூக்கலாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களின் தூக்கத்தை கொடுத்து வருகிறார். இணையத்தில் கவர்ச்சி தரிசனம் கொடுத்த அம்மணி இப்போது, பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் கசமுசா விஷயத்தை வெளிப்படையாக பேசும் விவகாரமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

முத்தத்தின் வகைகள்: அதில், ஆண்கள் அழகாக இருந்தா மட்டும் போதாது, அந்த நேரத்தில் பெண்கள் மனதையும் ஆசையை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு பிடிக்கும் என்றும், முத்தத்தின் வகைகள் குறித்தும் பேசிய அவர், உங்களுடைய பார்ட்னருக்கு முதலில் கன்னத்தில் முத்தம் கொடுங்க அது தான் காதலின் வெளிப்பாடு, பின் லிப் கிஸ் கொடுங்க, அது உங்களின் அன்பை வெளிப்படுத்தும். டேட்டிங்கிற்கு போவதற்கு முன் உங்கள் பார்ட்னர் பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டுபோங்க என்றும், இனி மேல் இந்த விஷயத்தில் சந்தேகம் வந்த தயங்காமல் என்னிடம் பேசுங்க என்றும் ரேஷ்மா விவகாரமான அந்த விஷயம் குறித்து பேசி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது டிரெண்டாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் ஏன் இந்த வேலை என்றும், பணத்திற்காக இப்படியா என்றும் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











