பாக்கியலட்சுமி தொடரிலிருந்து ரேஷ்மா விலகவில்லை.. வதந்திகளை நம்ப வேண்டாம் என படக்குழு அறிவிப்பு!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது.

வெற்றிகரமான அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா கேரக்டர்கள் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளன.

தொடரில் தற்போது எழிலின் திருமணம் மற்றும் அதையொட்டிய காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து பரபரப்பான எபிசோட்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்தத் தொடர் பல எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக முன்னணி தொடராக நடைபோட்டு வருகிறது. கோபி -பாக்கியா -ராதிகா என லீட் கேரக்டர்களில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி

தற்போது ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். முன்னதாக இந்தக் கேரக்டரில் ஜெனிபர் நடித்த நிலையில், தற்போது தன்னுடைய இயல்பான நடிப்பால் ரேஷ்மா இந்த கேரக்டரை சிறப்பாக்கியுள்ளார். முன்னதாக வெள்ளந்தியாக நடித்த அவரது கேரக்டர் கொஞ்சம் கொஞ்சமாக வில்லத்தனத்தை காட்டி வருகிறது.

ரேஷ்மா விலகியதாக தகவல்

ரேஷ்மா விலகியதாக தகவல்

இந்நிலையில் இந்த கேரக்டரில் இருந்து ரேஷ்மா பசுபுலேட்டி விலகவுள்ளதாகவும் அவர் மற்றொரு தனியார் சேனலின் புதிய தொடரில் கமிட்டாகியுள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இந்த கேரக்டர் ரசிகர்கள் மனதில் பச்சக் என்று ஒட்டியுள்ள நிலையில், இந்த மாற்றம் எத்தகைய ஏமாற்றத்தை அவர்களுக்கு கொடுக்கும் என்றும் கேள்வி எழுந்தது.

சீரியல் தரப்பு விளக்கம்

சீரியல் தரப்பு விளக்கம்

இந்நிலையில் ரசிகர்களின் மனதோடு ஒன்றிய ராதிகா கேரக்டரில் நடிப்பதில் இருந்து ரேஷ்மா விலகவில்லை என்றும் அது அனைத்தும் வதந்தியே என்றும் அதை நம்பவேண்டாம் என்றும் சீரியல் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து ராதிகாவாக ரேஷ்மாவே தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிசியான ரேஷ்மா பசுபுலேட்டி

பிசியான ரேஷ்மா பசுபுலேட்டி

அடுத்தடுத்த வெப் தொடர்கள், சீரியல்கள், படங்கள் என தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி. தினந்தோறும் தன்னுடைய சோஷியல் மீடியாவில் புதிய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கவர்ச்சியாக இவர் வெளியிட்டுவரும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து அதிகமான லைக்ஸ்களை அளித்து வருகின்றனர்.

முக்கியமான சீரியல்

முக்கியமான சீரியல்

இவரது கேரியரில் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. கோபியின் உண்மை நிலை அறியாமல் அவரை திருமணம் செய்ய நினைக்கும் ராதிகா, உண்மை தெரிந்ததும் டீச்சரின் வாழ்க்கையை தான் கெடுத்து விட்டோமோ என்ற பரிதவிப்பில் தவிக்கும் காட்சிகளில் ரேஷ்மா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X