Reshma pasupuleti :டைரக்டர்ஸ் என்னை கழுவி கழுவி ஊற்றியுள்ளனர்.. ரேஷ்மா பசுபுலேட்டி பளீச்!

சென்னை : நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சினிமா, சின்னத்திரை சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்க்ள என தன்னை மிகவும் பிசியாக வைத்துக் கொண்டுள்ளார்.

முன்னதாக ஏர்ஹோஸ்டஸ், ஐடி என அடுத்தடுத்த துறைகளில் தன்னை ஈடுபடுத்தி வந்த ரேஷ்மா, சினிமா மீது கொண்ட காதலால், சினிமாவில் போராடி வெற்றிப் பெற்று வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி, அடுத்தடுத்து போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Actress Reshma pasupuleti opens up about her acting and the reactions of directions in her initial stage

ரேஷ்மா பசுபுலேட்டி : நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தொடர்ந்து சின்னத்திரை, சினிமா மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என தன்னை பிசியாக வைத்துள்ளார். சின்னத்திரையில் ஆங்கராக தன்னுடைய பயணத்தை துவக்கிய இவர், சினிமாவிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் இவருக்கு சிறப்பான என்ட்ரியை தமிழ் சினிமாவில் கொடுத்தது. இந்தப் படத்தில் நடிகர் சூரியின் மனைவியாக புஷ்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

படத்தில் புஷ்பாவின் கணவராக சூரி படும் பாடு நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருக்கும். இந்தப் படத்தை தொடர்ந்து விமலுடன் விலங்கு என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார் ரேஷ்மா. இதையடுத்து சினிமாவில் ஒரே மாதிரியான கேரக்டர்களே அமைவதாக கூறி, சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார் ரேஷ்மா. தற்போது சின்னத்திரையில் பாக்கியலட்சுமி மற்றும் சீதாராமன் ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார்.

இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர், ரேஷ்மாவிற்கு மிகச்சிறந்த அடையாளத்தை கொடுத்துள்ளது. இதில் ஹீரோவின் இரண்டாவது மனைவியாக, வில்லத்தனம் கலந்து கேரக்டரில் நடித்து வருகிறார் ரேஷ்மா. இந்த கேரக்டரில் தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளும் முனைப்பு அவரிடம் காணப்படுகிறது. ஆனால் முதல் கணவனிடம் இருந்த அதே கோளாறு இரண்டாவது கணவனிடமும் இருப்பது அவரை மிகுந்த சஞ்சலத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதேபோல சீதாராமன் தொடரிலும் வில்லத்தனத்துடன் கூடிய கேரக்டரில்தான் நடித்து வருகிறார்.

Actress Reshma pasupuleti opens up about her acting and the reactions of directions in her initial stage

இதனிடையே அவர் பங்கேற்ற ரியாலிட்டி ஷோ ஒன்றில் தன்னுடைய திரைப்பயணம் குறித்த நினைவுகளை அவர் பகிர்ந்துக் கொண்டார். த்ரோபேக் வீடியோவாக வெளியாகியுள்ள இதில், முன்னதாக ஐடி, ஏர்ஹோஸ்டஸ், நர்ஸ் போன்ற வேலைகளில் பணியாற்றியுள்ள தான், சினிமாவின்மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக அந்த வேலைகளை விட்டுவிட்டு, ஒரு படத்திற்கான ஆடிஷனில் பங்கேற்றதாகவும், அதில் பங்கேற்பதற்கு முன்னதாக தன்னுடைய சகோதரர் பாபி சிம்ஹா, அவரது பெயரை உபயோகிக்க வேண்டாம் என்று கூறியதாகவும் ரேஷ்மா குறிப்பிட்டுள்ளார்.

ஒருவழியாக அந்த படத்தில் தான் தேர்வு செய்யப்பட்டதாகவும் தனக்கு மிகக்குறைந்த சம்பளமே பேசப்பட்டதாகவும் தெரிவித்த ரேஷ்மா, ஆனால் வாய்ப்பு கிடைத்ததற்காக தான் மிகவும் சந்தோஷப்பட்டதாகவும், சம்பளம் குறித்தெல்லாம் தான் கவலைக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தான் பாபி சிம்ஹாவின் சகோதரி என்று தெரிந்தவுடன், தனக்கு 3 மடங்கு சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும், சினிமாவில் பேக்கிரவுண்ட் ரொம்ப முக்கியம் என்றும் தெரிவித்தார்.

Actress Reshma pasupuleti opens up about her acting and the reactions of directions in her initial stage

தான் தன்னை சிறிது சிறிதாக மெருகேற்றியே தற்போதைய நிலைக்கு வந்துள்ளதாகவும் ஆரம்பத்தில் தனக்கு நடிக்க வரவில்லை என்று டைரக்டர்கள் தன்னை கழுவி கழுவி ஊற்றிய சம்பவங்கள் நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து தன்னை பிசியாக வைத்துக் கொண்டுவரும் ரேஷ்மா பசுபுலேட்டி, சமூக வலைதளங்களில் அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஏராளமான பாலோயர்களையும் பெற்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X