Don't Miss!
- News
பயங்கர குழப்பம்.. அதிமுக யாரை வேட்பாளராக அறிவித்தாலும்.. அடித்துச் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்!
- Finance
2 நாளில் ரூ.18,000 கோடியை இழந்த LIC.. எல்லாம் அதானி குழுமத்தால் வந்த பிரச்சனை!
- Lifestyle
வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டும் தெரியுமா?
- Sports
இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Automobiles
டாடாவோட கதையை முடிக்க பிளான்.. ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கிச்சா பொண்டாட்டி..ரேஷ்மா பசுபுலேட்டியின் பிரம்மாண்டமான வீடு..வாய்பிளந்த ரசிகர்கள்!
சென்னை : ரேஷ்மா பசுபுலேட்டியின் ஹோம் டூரைப்பார்த்து ரசிகர்கள் வாய்பிளந்து நிற்கின்றனர்.
ரேஷ்மா பசுபுலேட்டி சன் தொலைக்காட்சியில் சன் சிங்கர், கடிதம், என் இனிய தோழியே போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
மேலும், வாணிராணி, மரகத வீணை, காயத்ரி, பாக்கியலட்சுமி போன்ற பல சீரியல்களில் முக்கியமான வேடத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.
பாங்காக்கில்
குட்டி
டவுசரில்
குத்தாட்டம்
போட்ட
ரேஷ்மா..
த்ரோபேக்
வீடியோ
போட்டு
ஓவர்
ஃபீலிங்!

ரேஷ்மா பசுபுலேட்டி
நடிகை, தொகுப்பாளினி, செய்திவாசிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட ரேஷ்மா. இவர் முதன் முதலில் சன்தொலைக்காட்சியில் வம்சம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் தனது அறிமுகத்தைக் கொடுத்தார். விமான பணிப்பெண்ணான இவர் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் அந்த வேலையை விட்டுவிட்டார்.

புஷ்பா புருஷன்
வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரியின் மனைவியாக நடித்து இருப்பார். இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் இது என்றாலும் இதில் புஷ்பா கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. பட்டி தொட்டி எங்கும் புஷ்பா புருஷன் நீங்க தானே என்ற வசனம் செம வைரலானது. இந்த படத்தின் மூலம் இவருக்கு தனி ரசிகர் கூட்டம் உருவானது.

விலங்கு
புஷ்பா புருஷன் என்று பிரபலமான ரேஷ்பா தற்போது கிச்சா பொண்டாட்டியாக பிரபலமாக உள்ளார். நடிகர் விமல் நடிப்பில் பிரசாத் பாண்டிராஜ் இயக்கிய வெப் சிரீஸ் விலங்கு. இந்த தொடரில் இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர், ரேஷ்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த தொடரில் நடித்த அனைவரின் நடிப்பும் பாரட்டப்பட்டாலும் கிச்சா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானது.

கிச்சா பொண்டாட்டி
கிச்சாவின் மனைவியாக இந்த படத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்துள்ளார். கணவர் பால் வாங்க கடைக்கு போகும் நேரத்தில் வீட்டிற்கு வரும் ஆண்களுடன் உல்லாசமாக இருப்பது போல நடித்து, அவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஒரு போல்டான கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து அசத்தி இருந்தார். இதுவரை புஷ்பா புருஷன் என்று பிரபலமான ரேஷ்மாக விலக்கு படத்திற்கு பின் கிச்சா பொண்டாட்டியாக பிரபலமாகி உள்ளார்.

அட்டகாசமான வீடு
இந்நிலையில், நடிகை ரேஷ்மா சொந்தமாக ரேஷ்மா டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலை ஒன்றை நடத்தி வருகிறார். இதில் தனது வீட்டை ஹோம் டூர் வீடியோவாக பதிவிட்டுள்ளார். சமையல் அறை முதல் பால்கனி வரை அனைத்தையும் வளைத்து வளைத்து வீடியோ எடுத்துள்ளார். அந்த சமையல் அறையில் மார்டன் கிச்சன் நீல நிறம் வெள்ளை நிறத்தில் அம்சமாக இருக்கிறார்.

உங்களைப்போலவே வீடும் சூப்பர்
மேலும் வீட்டிற்குள்ளே குட்டி செல்ல நாய் குட்டியை வளர்ந்து வருகிறார்.மேலும், பெட்ரூம், ஹால் போன்ற அனைத்து இடங்களிலும் சுற்றி சுற்றி கண்ணாடி வைத்துள்ளார். எப்போது கண்ணாடியை பார்த்துக்கொண்டு இருப்பது எனக்கு பிடிக்கும் என்பதால் வீட்டில் ஆங்காங்கே கண்ணாடி வைத்து இருப்பதாக கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்து உங்களைப்போலவே உங்க வீடும் சூப்பர் என கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.