Reshma :ரசிகரை திருமணம் செய்ய ரேஷ்மாவின் கண்டிஷன்.. இந்த வயசுலயுமா?

சென்னை : நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி விஜய் டிவியின் பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட படங்களிலும் வெப் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ரேஷ்மா பசுபுலேட்டி, அடுத்தடுத்த ரீல்ஸ், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறார்.

Actress Reshma pasupuletis condition to a fan for marriage

ரசிகரை திருமணம் செய்ய ரேஷ்மாவின் கண்டிஷன்: நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடிகர் சூரியின் மனைவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். தொடர்ந்து வெப் தொடர்களிலும் ரேஷ்மா நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி, சீதாராமன் போன்ற தொடர்களிலும் முன்னணி கேரக்டர்களில் இவர் நடித்து வருகிறார். முக்கியமாக பாக்கியலட்சுமி தொடர் இவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கேரக்டரில் நாயகனின் இரண்டாவது மனைவியாக நடித்து வருகிறார் ரேஷ்மா. இந்தக் கேரக்டரில் தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தில், நாயகனின் முதல் மனைவியின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் இவர் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வார். இதனால் சமயத்தில் வில்லியாகவும் சமயத்தில் கேரக்டர் ரோலிலும் இவர் காணப்படுகிறார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி என்பது ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்ரைஸ். இதனிடையே, சமூக வலைதளத்தில் ரேஷ்மாவிடம் ரசிகர்கள் கேள்வி -பதில் செஷனை நடத்தினர். அதில் ஒரு ரசிகர், ரேஷ்மாவை திருமணம் செய்துக் கொள்ள கேட்டார். இதற்கு பதிலளித்த ரேஷ்மா, கண்டிப்பாக, ஆனால் தன்னுடைய அம்மா அதற்கு அனுமதி அளிக்க மாட்டார், என்ன செய்வது என்று கேள்வி எழுப்பினார்.

Actress Reshma pasupuletis condition to a fan for marriage

தொடர்ந்து, பாக்கியலட்சுமி தொடரில் கோபியாக நடிக்கும் சதீஷ், உண்மையில் தொடரை விட்டு வெளியேறுகிறாரா, அவருக்கு என்ன ஆயிற்று என்று மற்றொரு ரசிகர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரேஷ்மா பசுபுலேட்டி, அவர் சீரியசாக வெளியேறினாரா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும், அடுத்த ஷெட்யூலில் அவரை பார்க்கும்போது இதுகுறித்து கேட்டு சொல்வதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக பாக்கியலட்சுமி தொடரில் இருந்து தான் விலகவுள்ளதாக ரேஷ்மா பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர், அதில் உண்மையில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார். தான் இந்தத் தொடரின்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள நிலையில், அதிலிருந்து விலகப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் கோபியை தொடர்ந்து இவரும் இந்தத் தொடரில் இருந்து விலகவுள்ளதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X