மோசமான கமெண்ட்.. நச்சுனு பதில் கொடுத்த நடிகை ரேஷ்மா! என்னன்னு பாருங்க?
சென்னை : வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் பிரபலமான ரேஷ்மா பசுபுலேட்டி ரசிகர்களின் விவகாரமான கமெண்டுகளுக்கு நச்சுனு பதில் அளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பாக்யலட்சுமி தொடரில், ராதா கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார் ரேஷ்மா.
தற்போது இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். மேலும், கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 4ல் நடுவராகவும் இருந்து வருகிறார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ரேஷ்மா இணையவாசிகளின் விவகாரமான கமெண்டுக்கு பதில் அளித்துள்ளார். அதில், அழகாக இருந்த நீங்க, ஆப்ரேஷன் செய்து குரங்கு மாதிரி ஆகிவிட்டீர்கள் என ஒரு ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். இதற்கு பதிலளித்த ரேஷ்மா, சினிமாவில் நான் 13 வருடத்திற்கு மேலாக இருப்பதால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கு நன்றாக தெரிகிறது. பெண் வயதிற்கு ஏற்றபடி உடல் எடை அதிகரிக்கும், சிலருக்கு குறையும் இது இயற்கையானது.

அறுவை சிகிச்சை செய்யவில்லை
பிக்பாஸ் வீட்டில் சரியாக சாப்பாடு இல்லாததால், நான் வெளியில் வந்த போது மிகவும் ஒல்லியாக இருந்தேன். அப்போது எனக்கு தைராய்டு வந்துவிட்டதால், என் உடல் உடை அதிகரித்து விட்டது. உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்து வருகிறேன். மற்றபடி முகத்திற்கோ, மார்பகத்திற்கோ எந்தவிதமான அறுவை சிகிச்சையும் நான் செய்து கொள்ளவில்லை என்றார்.

எல்லா பெண்களும் தப்பானவங்க
மேலும், உங்கள மாதிரி பெண்ணுங்கள பார்க்கும் போதுதான் எல்லா பெண்ணுங்களும் தப்பாத்தான் இருப்பாங்களோ என்ற டவுட் வருகிறது என்று நெட்டிசன்ஸ் ஒருவரின் கமெண்டுக்கு பதில் அளித்த ரேஷ்மா, மார்டன் உடை அணிந்து வந்தால் அந்த பெண்ணு தப்பான பெண்ணு, புடவை கட்டியிருந்தா, நல்ல பெண்ணு என்று நினைப்பது ரொம்ப தப்பு. குடும்ப குத்து விளக்கா இருக்குறவங்க, நைட்டில் பயங்கர குத்தாட்டம் ஆடுவாங்க அதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

எனக்கு கவலை இல்லை
அதே போல என் உடம்பை பற்றியும், என் மார்பகம், என் பின்னழகை பற்றி பலர் மோசமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஒரு நல்ல உடையில் போட்டோ எடுத்து போட்டோலும் அதிலும் அவர்களின் கண்கள் தவறான இடத்தைத்தான் பார்க்கிறது. அதைப் பற்றி எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லை. இருந்தாலும், குடும்பத்தில் இருப்பவர்கள் வருத்தப்படக்கூடாது என்பதற்காக இன்ஸ்டாகிராமில் கமெண்டை ஆஃப் செய்து வைத்து இருக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











