கத்துக்கிட்ட மொத்த வித்தையை பாருங்க.. ரேஷ்மா பசுபுலேட்டியின் வெறித்தனமான வீடியோ!
சென்னை: சின்னத்திரை மற்றும் பெரிய திரை என இரண்டு திரைகளிலும் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ஒரு மிகச்சிறந்த நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு மாடல் அழகியாகவும் இருக்கிறார். தனது உடல் மீது அதீத கவனம் கொண்ட ரேஷ்மா வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
விமான பணிப்பெண்ணாக இருந்த ரேஷ்மா, சன் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதைத் தொடர்ந்து, உயிர்மெய் என்ற தொடரில் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் சுந்தரகாண்டம் என்ற தொடரில் வேந்தர் தொலைக்காட்சியிலும் ஆண்டாள் அழகர் என்ற தொடரில் விஜய் தொலைக்காட்சியிலும் நடித்திருக்கிறார். சீரியலில் பிரபலமானதைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு மசாலா படமான இனிமையான நாட்கள், வேலையில் வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2, மணல் கயிறு 2 போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி: இப்படி சீரியல், சினிமா என இரண்டிலும் இவர் மாறி மாறி நடித்து வந்தாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்யலட்சுமி சீரியல் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இவர் நடித்த, வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திலும் இவரின் கதாபாத்திரம் பேசும்படியாக இருந்தது. தற்போது ரேஷ்மா, பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் கசமுசா விஷயத்தை வெளிப்படையாக பேசும் விவகாரமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் அதில் முத்தத்தின் வகைகள் குறித்தும், பல அந்தரங்க விஷயம் குறித்தும் அதில் பேசி வருகிறார்.
கத்துக்கிட்ட மொத்த வித்தை: சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி ரசிகர்களை கவர்ந்து இழுக்க கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் தன் கவர்ச்சியால் கட்டிப்போட்டு விடுவார். எனவே இணைய பக்கங்களில் இவர் எப்போது புகைப்படங்களை வெளியிடுவார் என்று ஒரு கும்பலே காத்திருக்கும். அது மட்டுமல்லாமல் இவரது இணைய பக்கங்களை அதிகளவு ஃபாலோயர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.
தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறித்தனமான வொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த பேன்ஸ், ஏசியில வொர்க் அவுட்டா என்றும், வெறித்தனமான வொர்க் அவுட்டா இருக்கே என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











