Just In
- 9 min ago
குளியல் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்...கவர்ச்சியில் இணையத்தை கதறவிடும் நடிகை
- 33 min ago
என் பரம்பரையிலேயே முதல் கார்.. எங்க அம்மா அழுதுட்டாங்க.. குக் வித் கோமாளி 2 புகழ் உருக்கம்!
- 44 min ago
பாலிவுட் மெகா ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பிரபாஸ்...பிரம்மாண்டமாக தயாராகும் அதிரடி
- 1 hr ago
100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
Don't Miss!
- Lifestyle
உங்க ராசிப்படி உறவில் உங்களின் உண்மையான 'தேவை' என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- News
ஒருத்தரை நம்பி திட்டம் போட்டேன்.. வீணாப் போச்சு.. விரைவில் அறிவிப்பேன்.. கஸ்தூரி அதிரடி தகவல்!
- Finance
சொந்த வீடு கட்ட ஆசையா.. இது தான் சரியான நேரம்... எஸ்பிஐ-யின் சூப்பர் ஆஃபர்..!
- Automobiles
வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!
- Sports
புலம்பறதையும் புகார் சொல்றதையும் விடுங்க... என்ன செய்யறதுன்னு யோசிங்க... ரிச்சர்ட்ஸ் அறிவுரை!
- Education
ரூ.84 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IIFCL நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மூன்றாவது திருமணத்துக்கு ரெடியான பிக்பாஸ் பிரபலம்.. காதலர் தினத்தில் காதலருடன் பீச்சில் அதகளம்!
சென்னை: ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்தான நிலையில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தனது காதலருடன் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார்.
நடிகை ரேஷ்மா, மசாலா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். விஷ்ணு விஷால், சூரி நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
இதன் மூலம் பெரும் பிரபலமானார் ரேஷ்மா. அதனை தொடர்ந்து கோ 2, மணல் கயிறு, திரைக்கு வராத கதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ்
நடிகை ரேஷ்மா வம்சம், வாணி ராணி, மரகத வீணை, என் இனிய தோழியே, சுந்தரகாண்டம், ஆண்டாள் அழகர், உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். சன் சிங்கர் ரியாலிட்டி ஷோவையும் தொகுத்து வழங்கினார். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் ரேஷ்மா.

துன்பங்கள்
அப்போது தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பல்வேறு துன்பங்களை பகிர்ந்து கொண்டார். ஏற்கனவே இரண்டு திருமணம் செய்த ரேஷ்மா, கணவர்களின் கொடுமைகளுக்கு ஆளானதையும் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து யாருடைய உதவியும் இன்றி வளர்த்து வருவதையும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அனுதாபம்
அவர் கூறியதை கேட்டு சக ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களும் கண்ணீர் வடித்தனர். இதனை தொடர்ந்து அவர் மீது பார்வையாளர்களுக்கு அனுதாபம் ஏற்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தொடர்ந்து விதவிதமான உடையில் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வந்தார் ரேஷ்மா.

நடிகருடன் கிசு கிசு
அதற்கு பலனாக படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்நிலையில் நடிகை ரேஷ்மா மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனாலும் தெளிவான பதிலை சொல்லாமல் மழுப்பினார் நடிகை ரேஷ்மா.

காதலருடன் ஜாலி
இந்நிலையில் தற்போது மூன்றாவது திருமணத்திற்கு ரெடியாகி விட்டார் ரேஷ்மா. நேற்று காதலர் தினத்தை உலகமே கோலாகலாமாக கொண்டாடிய நிலையில் ரேஷ்மாவும் அவரது காதலருடன் செம ஜாலியாக காதலர் தினத்தை கொண்டாடியிருக்கிறார். பீச்சில் தனது காதலருடன் எடுத்த செல்பியை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
|
நானும் என்னுடையவரும்
மேலும் என்னுடைய அனைத்து நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் காதலர் தின வாழ்த்துகள் என்று கூறியுள்ள ரேஷ்மா, காதலை கொண்டாடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நானும் என்னுடையவரும் என்றும் ஹேஷ்டேகுடன் குறிப்பிட்டுள்ளார். ரேஷ்மா தனது காதலருடன் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.