வாவ்.. பிக்பாஸ் ரேஷ்மாவா இது.. கறுப்பு நிற மார்டர்ன் டிரெஸில் பயங்கர கவர்ச்சி.. அசத்துறாங்களே!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரேஷ்மா, கறுப்பு நிற மாடர்ன் உடையில் பயங்கர கவர்ச்சி காட்டி போட்டிருக்கும் போட்டோ வைரலாகியுள்ளது.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் பெரும் பிரபலமானார் ரேஷ்மா.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ரேஷ்மா. அப்போது தனது பர்சனல் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறி பார்வையாளர்களை கலங்கச் செய்தார்.

சோஷியல் மீடியா
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ரேஷ்மா, தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ரேஷ்மா.
அழகான லுக்
அண்மையில் நீல நிற புடவையில் அழகாகவும் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து கிரங்கடித்தார் ரேஷ்மா. ஹோம்லி லுக்கில் ரேஷ்மா போஸ் கொடுத்த அந்த போட்டோக்கள் லைக்ஸ்களை அள்ளியதோடு சமூக வலைதளங்களிலும் வைரலானது.

கறுப்ப நிற கவுன்
தொடர்ந்து பல விதமான உடைகளில் போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார் ரேஷ்மா. அந்த வகையில் தற்போது கறுப்பு நிற கவுனில் முன்னழகை காட்டியபடி கிக்கேற்றியிருக்கிறார் ரேஷ்மா.

சாம்பலில் இருந்து எழுகிறேன்
கறுப்பு நிற கவுனில், ஃபிரி ஹேரில் நச்சென இருக்கிறார் ரேஷ்மா. அந்த போட்டோக்களை சாம்பலில் இருந்து உயிர்த்தெழுகிறேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார் ரேஷ்மா.

எப்போதுமே அழகுதான்
ரேஷ்மாவின் இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், எப்போதுமே நீங்கள் அழகுதான் என டிவிட்டியுள்ளனர். ரேஷ்மாவின் இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











