twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரேவதிக்கு மாநில பிலிம் விருதைப் பெற்றுத் தந்த பூதகாலம் - படத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?

    |

    சென்னை: 39 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ரேவதிக்கு கேரளா மாநில பிலிம் விருது வாங்கிக் கொடுத்திருக்கிறது பூதகாலம் திரைப்படம்.

    அச்சமூட்டும் பேய் கதையமைப்பில் காட்சிக்குக் காட்சி மிரட்டியிருக்கிறார்கள். அதற்கேற்ப ஒரு இளைஞனின் அம்மா கதாப்பாத்திரத்தில் பாசத்தையும், பயத்தையும், குழப்பத்தையும் ஒன்று சேர்த்து மிரட்டியிருக்கிறார் ரேவதி.

    கதையும், கதை நடக்கும் சூழலும் நமக்குப் பழக்கப்பட்டது தான் என்றாலும், இத்திரைப்படம் மேக்கிங்கில் திகிலையும், மர்மத்தையும் அப்படியே கொடுத்து மிரள வைக்கிறது.

    கமல்ஹாசனுக்கும் சிவாஜிக்கும் 5 தான் வித்தியாசமா? கமல் என்ன சொல்லியிருக்காரு பாருங்க! கமல்ஹாசனுக்கும் சிவாஜிக்கும் 5 தான் வித்தியாசமா? கமல் என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

    கதை என்ன?

    கதை என்ன?

    ஒரு நடுத்தரக் குடும்பம். அந்தக் குடும்பத்தின் தலைவியாக ரேவதி. அவருக்கு மகனாக ஷேன் நிகாம். இவர்களோடு அந்த வீட்டில் ஒரு பாட்டி படுத்த படுக்கையாக இருக்கிறார். ரேவதி அப்பாட்டிக்கு டயப்பர் மாற்றி விடுவது முதல் சகல வேலைகளையும் செய்கின்றார். ரேவதிக்கு பொறுப்பில்லாத தன் மகன் மேல் கோபமும் ஆதங்கமும். ஒரு வேலைக்குப் போகாமல் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறார் ஷேன். தனது தாய்க்கு ஒரு சின்ன உதவி செய்யக் கூட சலித்துக் கொள்ளும் மனநிலையில் இருக்கிறார். இப்படி இருக்க அந்த வீட்டில் பாட்டி திடீரென இறந்துவிட, அதன் பின்னர் அமானுஷ்யங்கள் நடக்கத் தொடங்குகின்றன. எப்போதும் குடியும், உறக்கமமுமாக இருக்கும் ஷேனுக்கு அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்கள் தென்படத் தொடங்குகின்றன. இதனால் அச்சமடையத் தொடங்கும் ஷேனால் ரேவதிக்கும் மன உளைச்சல் ஏற்படுகின்றது. இந்த அமானுஷ்யங்களுக்கான காரணம் என்ன? அந்த வீட்டில் அப்படி என்னதான் இருக்கிறது என்பது மீதிக் கதை.

    ரேவதியின் நடிப்பு

    ரேவதியின் நடிப்பு

    ஒரு நடுத்தரக் குடும்பத் தலைவியாக, தாயாக அத்தனை உணர்வுகளையும், முகத்தில் பிரதிபலித்திருக்கிறார் ரேவதி. எளிமையான நூல் புடவையில் எந்த ஒரு முகப்பூச்சும் இல்லாமல் அப்படியே அக்கதாப்பாத்திரத்தை கண் முன்னே நிறுத்துகிறார். படுத்த படுக்கையாகக் கிடக்கும் தனது தாயை கவனிக்கும் பாரம் ஒரு பக்கம், வேலை வெட்டிக்குப் போகாத மகனைப் பற்றிய கவலை ஒருபுறம் என முதல் பாதி முழுக்க அத்தனை உணர்வுகளையும் முகத்தில் ஓட விடும் ரேவதி, இரண்டாம் பாதியில் தீர்க்கமாக எடுக்கும் முடிவுகளின் போது அப்படியே அந்தக் கதாப்பாத்திரத்தின் மன உணர்வுகளை தனது நடிப்பிலும், உடல்மொழியிலும் காட்டுகின்றார். அதிலும் கிளைமாக்ஸ் அருகே வரும் அந்த டைனிங் டேபிள் காட்சி ஒன்று போதும் அவருக்கு தாராளமாக இன்னும் பல அவார்டுகளை அள்ளிக் கொடுக்கலாம் என்று தோணும்.

    சிறந்த ஒளிப்பதிவு

    சிறந்த ஒளிப்பதிவு

    அந்த அழுக்கு வீடு, இருட்டு அறை இவை தான் படம் நெடுகிலும் வருகின்றது. ஆனால் அந்த சூழலின் கனத்தையும், வீரியத்தையும் நம்முள் கடத்துவது ஷெநாடு ஜலாலின் ஒளிப்பதிவு தான். அவர் வைத்திருக்கும் பல கேமரா ஆங்கில்கள் தான் அந்த அமானுஷ்யத்தையும், சுவாரசியத்தையும் நமக்குள் புகுத்துகின்றது. செர்விக்கல் காலர்நெக் அணிந்த கதாப்பாத்திரத்தின் வலியை ஒளிப்பதிவு அப்படியே நமக்குத் தருகின்றது. குறிப்பாக கடைசி கிளைமாக்ஸ் காட்சிகளில் எதார்த்தமான அந்த ஒளிப்பதிவு அபாரம். அதற்கேற்ப கோபி சுந்தர் மற்றும் ஷேன் நெகாமின் இசையும் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

    மலையாள சினிமாவின் பலம்

    மலையாள சினிமாவின் பலம்

    ராகுல் சதாசிவன் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்திற்கு அவரும், ஶ்ரீகுமரன் ஷ்ரேயாசும் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். நாம் அடிக்கடிக் கேட்கும் ஒரு சாதாரண கதையை எவ்வளவு எதார்த்தமாகச் சொல்ல முடியுமோ அந்த அளவிற்கு சொல்லி காட்சிகளால் விவரித்திருக்கிறார்கள். அது தான் மலையாள சினிமாக்களின் பலமாகவும் இருக்கிறது. இதே கதையில் கொஞ்சம் மசாலா பூசியிருந்தாலும் இந்த சுவாரசியமும், நிஜத்தில் நடப்பது போன்ற உணர்வும் கெட்டுப் போயிருக்கும். அந்த வகையில் பூதகாலம் ரசிக்க வைக்கும் ஒரு படம் என்பதில் சந்தேகமேயில்லை. தாய்லாந்து பேய் படங்களை ரசிப்பவர்களுக்கு நிச்சயம் இப்படம் மிகவும் பிடிக்கும்.

    English summary
    Actress Revathi received Kerala Film Awards For bhoothakalam.. What’s Special in that movie?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X