twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    39 ஆண்டுகளுக்குப் பிறகு ரேவதிக்கு முதல் கேரளா ஸ்டேட் பிலிம் அவார்டு

    |

    சென்னை: 39 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ரேவதிக்கு நேற்று சிறந்த நடிகைக்கான முதல் கேரள மாநில பிலிம் விருது வழங்கப்பட்டிருக்கிறது.இந்த ஆண்டு அவர் நடித்த பூதகாலம் என்ற திரைப்படத்திற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

    1983-ம் ஆண்டு கட்டத்தே கிளிக்கூடு என்ற திரைப்படத்தில் மலையாளத்தில் அறிமுகமான ரேவதிக்கு, கேரளாவில் கிடைக்கும் முதல் மாநில விருது இதுவாகும்.

    கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு... உலகநாயகன் படம்னா சும்மாவா? கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு... உலகநாயகன் படம்னா சும்மாவா?

    பூதக்காலம்

    பூதக்காலம்

    இந்த ஆண்டு ஜனவரி மாதம் பூதக்காலம் என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார் ரேவதி. சோனி லைவ் என்ற ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. குறிப்பாக ஆஷா கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருப்பார் ரேவதி. ராகுல் சதாசிவன் இயக்கியிருந்த இத்திரைப்படம் அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட திகில் கதையாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்விருது பெற்றது குறித்து ரேவதி இன்ஸ்டாவில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். "கேரளா ஸ்டேட் பிலிம் விருது குழுவினருக்கு எனது நன்றி. ஆஷா தம்பியாக கட்டத்தே கிளிக்கூடு மேலும் இப்போது ஆஷாவாக பூதகாலத்தில். 39 ஆண்டுகள் ஆனது இது எனது முதல் கேரளா ஸ்டேட் பிலிம் அவார்ட். இவ்விருதுக்காக என்னைத் தேர்வு செய்த குழுவினருக்கு நன்றி" எனத் தெரிவித்திருக்கிறார்.

    80-களில் கனவு நாயகி

    80-களில் கனவு நாயகி

    பாரதிராஜாவின் மண்வாசனை திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் ரேவதி. 80,90-களில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தார். குடும்பப்பாங்கான முகம், எடுப்பான தோற்றம் என அன்றைய இளைஞர்கள் ரேவதி போன்ற ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு ஜனரஞ்சகமாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்தார். கடைசியாகத் தமிழில் நவரசா திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இன்னும் சில படங்களில் தமிழில் நடித்து வருகின்றார்.

    47 வயதில் குழந்தை

    47 வயதில் குழந்தை

    80-களில் உச்ச நடிகையாக இருந்த போதே, இயக்குநர் சுரேஷ் மேனனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். என்றாலும், அவர்களது திருமண வாழ்க்கை 2013-ல் முடிவுக்கு வந்து விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு தனது 47-வது வயதில் டெஸ்ட் டியூப் சிகிச்சை மூலம் குழந்தை பெற்றிருக்கிறார். அக்குழந்தைக்கு மஹி என பெயர் சூட்டி வளர்த்து வருகின்றார்.

    3 தேசிய விருதுகள்

    3 தேசிய விருதுகள்

    இதுவரை நடிகை ரேவதி சிறந்த நடிகைக்கான 3 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். முதல் விருதாக தேவர் மகன் திரைப்படத்திற்காக அவருக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர், மிட்ஆர் மை பிரண்ட், ரெட் பில்டிங் வேர் த சன்செட்ஸ் என மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றவர் நடிகை ரேவதி. நடிகை என்பதையும் தாண்டி, இயக்குநர், திரைக்கதையாசிரியர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பாடகி, எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர் ரேவதி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actress Revathi Received Kerala State Film Awards after 39 Years
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X