அட கடவுளே.. இயக்குநர் முதல் டாக்டர் வரை.. பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிட்ட நடிகை!

சென்னை: தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்களின் பட்டியலை பிரபல நடிகை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு பயன்படுத்தி கொள்ளும் பழக்கம் ஹாலிவுட் சினிமா முதல் கோலிவுட் வரை உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட நடிகைகள் புகார் அளிக்கும் வகையில் மேற்கத்திய நாடுகளில் Me too என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

பலரின் லீலைகள்

பலரின் லீலைகள்

இதன்மூலம் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியிலான தொல்லைகள் குறித்து #Metoo என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி புகார் அளித்து வருகின்றனர். இதன்மூலம் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் என பல தாயரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் லீலைகள் அம்பலமானது.

முன்னணி நடிகைகள்

முன்னணி நடிகைகள்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை அனுபவங்களை தைரியமாக வெளிப்படுத்தினர். தமிழ் சினிமாவை பொறுத்த வரை பாடகி சின்மயி, நடிகை அனுஷ்கா ஷெட்டி, வரலக்ஷ்மி என பலரும் தங்களின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

நடிகைகள் தயக்கம்

நடிகைகள் தயக்கம்

இதேபோல் மலையாள சினிமாவிலும் பார்வதி மேனன் உட்பட பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை ஷேர் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். இருப்பினும் பல நடிகைகள் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயரை சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

பட்டியல் வெளியீடு

பட்டியல் வெளியீடு

இந்நிலையில் பிரபல மலையாள நடிகை ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர்களின் பெயர் மற்றும் தொழிலுடன் தெள்ளத் தெளிவாக பதிவிட்டுள்ளார் அந்த நடிகை.

பட்னாகர் பட நாயகி

பட்னாகர் பட நாயகி

அதாவது நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்டவர் ரேவதி சம்பத். 27 வயதான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘பட்னாகர்' எனும் மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார்.

துன்புறுத்தியவர்கள்

துன்புறுத்தியவர்கள்

இவர் தற்போது, தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என, 14 பேருடைய பட்டியலை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த பதிவில் "இவர்கள் என்னை பாலியல் ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்வு ரீதியாக துன்புறுத்தியவர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர்கள் நடிகர்கள்

இயக்குநர்கள் நடிகர்கள்

அந்த பட்டியலில் சினிமா இயக்குநர், போலீஸ், டாக்டர் என பலரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அதன்படி இயக்குநர் ராஜேஷ் தொச்சிவர், நடிகர்கள் சித்திக், சிஜூ, டாக்டர் அஜய் பிரபாகர், சப் இன்ஸ்பெக்டர் பினு என பலரின் பெயர் உள்ளது.

ஆதரவும் எதிர்ப்பும்

ஆதரவும் எதிர்ப்பும்

நடிகை ரேவதி சம்பத்தின் இந்த பதிவால் மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிலரும் விளம்பரத்திற்காக செய்வதாக சிலரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X