Riyaz Khan: ரியாஷ் கான் மீது நடிகை பாலியல் புகார்.. குடும்பத்தில் வெடித்த பிரச்சனை!
திருவனந்தபுரம்: ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரைத்துறையில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் தொடர்ந்து வருவதால், மலையாள சினிமா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்த வகையில் மலையாள நடிகை ஒருவர் ரியாஷ் கான் தன்னை தகாத உறவுக்கு அழைத்ததாக புகார் கூறியுள்ளார்.
மலையாள சினிமாவில் பெண் கலைஞர்களுக்கு எதிரான நடிக்கும் பாலியல் சீண்டல்களை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியில் பழம்பெரும் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த கமிட்டி பல பெண்களிடம் விசாரணை நடத்தி, கடந்த 2019ம் ஆண்டு கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 4 வருடங்களுக்கு மேலாக இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது.

ஹேமா கமிஷன் அறிக்கை: இதைத்தொடர்ந்து, தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த அறிக்கை வெளியானது. இதில், மலையாள சினிமாவில் பெண்கள் போகப்பொருளாக பார்க்கப்படுவதாகவும், படப்பிடிப்பு தளத்தில் பலவிதமான சங்கடத்தை நடிகைகள் பலவிதமான சங்கத்தை சந்திப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை வெளியானதற்கு பின்னர் பல நடிகைகள் தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
சித்திக் ராஜினாமா செய்தார்: அந்த வகையில், ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார். அதில், தான் பிளஸ் டூ முடித்த நேரத்தில் தன்னை அணுகிய நடிகர் சித்திக், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அப்போது பலாத்காரம் செய்ததாக அவர் கூறியிருந்தார். இந்த புகார்களைத் தொடர்ந்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து சித்திக் விலகியுள்ளார். சித்திக் தனது ராஜினாமா கடிதத்தை அம்மா தலைவர் மோகன்லாலுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

நடிகர் ரியாஸ் கான்: இதைத்தொடர்ந்து, நடிகை ரேவதி சம்பத், நடிகர் ரியாஸ் கான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.ஒரு புகைப்படக் கலைஞர் என் அனுமதி இல்லால் ரியாஷ் கானிடம் என் தனது தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து, எனக்கு இரவு ரியாஸ் கானிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது அவர், பாலியல் உறவில் ஆர்வம் உள்ளதா என்று கேட்டதாகவும், வெளிப்படையான கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி தகாத உறவிற்கு அழைத்ததாகவும் கூறியுள்ளார். மலையாள சினிமாவை ஆட்டிப்படைத்த இந்த விவகாரம் தற்போது கோலிவுட்டிலும் தலையெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











