சுஷாந்துடன் சண்டை போட்டது நிஜம்தான்.. 9 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை கக்கிய ரியா!

சென்னை: சுஷாந்துடன் சண்டை போட்டது உண்மைதான் என அவரது காதலியான ரியா சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Sushant Singh fans Protest to Boycott Salman Khan, Karan Johar

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். 34 வயதான சுஷாந்தின் மரணம் ரசிர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுஷாந்த் மரணித்து ஒரு வாரம் ஆகவுள்ள நிலையில் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர் ரசிகர்கள். சுஷாந்தின் மரணம் குறித்து நாள் தோறும் ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளது.

மரணத்திற்கு காரணம்

மரணத்திற்கு காரணம்

சுஷாந்தை ஓரங்கட்டிய பாலிவுட்டின் வாரிசு அரசியல் மற்றும் அவரது காதலியான ரியா சக்ரபர்த்தி அவரை விட்டு பிரிந்து சென்றது உள்ளிட்ட காரணங்கள்தான் சுஷாந்தின் மரணத்திற்கு காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

சுஷாந்த் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அது குறித்து அவரது குடும்பத்தினர், மருத்துவர், நண்பர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்து பிரபலங்கள் பலருடனும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அளிக்கும் தகவல்களையும் போலீசார் பதிவு செய்து வருகின்றனர்.

டேட்டிங் போட்டோக்கள்

டேட்டிங் போட்டோக்கள்

அந்த வகையில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தியிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
பாலிவுட் நடிகையான ரியாவும் சுஷாந்தும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் டேட்டிங் சென்றது, ஒன்றாக ஊர் சுற்றியது உள்ளிட்ட போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

தூங்கும் முன்பு

தூங்கும் முன்பு

ஆனால் சுஷாந்துடன் காதல் உறவில் இருந்ததை மறைத்து வந்தார் ரியா. ஆனால் போலீசார் விசாரணையில் சுஷாந்த் நாள்தோறும் தூங்கப்போகும் முன்பு பேசியவர்களின் லிஸ்ட்டில் காதலியான ரியா சக்ரபர்த்தியின் பெயரும் இருந்தது.

ஒரே வீட்டில் வசித்து..

ஒரே வீட்டில் வசித்து..

இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரியா சக்ரபர்த்தி தான் ராஜ்புத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும், நவம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததால் இருவரும் சேர்ந்து சொத்துக்களில் முதலீடு செய்ய விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

போட்டோக்கள் வீடியோக்கள்

போட்டோக்கள் வீடியோக்கள்

மேலும் நடிகை ரியாவின் தொலைபேசியை காவல்துறையினர் முழுமையாக ஸ்கேன் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதில் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த படங்கள், வீடியோக்கள் மற்றும் இருவரும் டெக்ஸ்ட் மூலம் போனில் உரையாடிய அனைத்தையும் போலீசார் ஸ்கேன் செய்துள்ளனர்.

சண்டை போட்டு பிரிந்தேன்

சண்டை போட்டு பிரிந்தேன்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தை பிரிந்துவிட்டதாக கூறிய நடிகை ரியா சக்ரவர்த்தியிடம் காவல்துறையினர் பிரிந்ததற்கான காரணம் குறித்து கேட்டனர். அதற்கு தங்களுக்குள் சண்டை வந்ததால் இருவரும் சேர்ந்து வசித்த கார்ட்டர் ரோடு பென்ட்ஹவுஸை விட்டு வெளியேறியதாக ஒப்புக்கொண்டார் ரியா.

ரியா ஒப்புதல்

ரியா ஒப்புதல்

சண்டை போட்டு பிரிந்த பின்னரும் இருவரும் தொலைபேசியிலும் டெக்ஸ்ட்டிலும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்ததையும் ரியா சக்ரவர்த்தி ஒப்புக்கொண்டார்.
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நடிகர் இயக்குனர் முகேஷ் சாப்ரா உட்பட 13 பேரின் ஸ்டேட்மெண்ட்டை காவல்துறை இதுவரை பதிவு செய்துள்ளது.

வெளிவந்த உண்மை

வெளிவந்த உண்மை

சுஷாந்த் சிங் ராஜ்புத் தனக்கு ஒரு நல்ல நண்பர் என்றும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகர் நடிகைகள் ஒன்றாக இருப்பது போல் காட்டிக் கொள்வார்கள் என்றும் முன்பு வியாக்கியானம் பேசியிருந்தார் ரியா. இந்நிலையில் போலீசார் துருவி துருவி நடத்திய விசாரணையில் அவருடன் ஒரே வீட்டில் வசித்தது, திருமணம் செய்ய இருந்தது, சண்டை போட்டது உள்ளிட்ட தகவல்களை கக்கியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X