சுஷாந்தை விட அவர் வீட்டு வேலைக்காரரிடம் 287 முறை போனில் பேசிய ரியா.. வெளியானது ஒரு வருட தகவல்!

By

மும்பை: நடிகை ரியா சக்கரவர்த்தி, சுஷாந்தை விட அவர் வீட்டு வேலைக்காரரிடம் அதிக முறை போனில் பேசியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்

நடிகர், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு பரபரப்பாகி இருக்கிறது. இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில் இப்போது சிபிஐ வசம் சென்றிருக்கிறது.

சுஷாந்த் சிங்கின் நண்பர்கள், சினிமா இயக்குனர்கள், அவருடன் பழகிய நடிகர், நடிகைகள் உள்பட 38 பேரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தி அதைப் பதிவு செய்தனர்.

ரியா சக்கரவர்த்தி

ரியா சக்கரவர்த்தி

நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரித்தனர். அவரிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், ரியா சக்கரவத்தி மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பாட்னா போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

பண பரிமாற்றம்

பண பரிமாற்றம்

அதில், 'சுஷாந்த் சிங்கை, ரியா மிரட்டி வந்துள்ளார் என்றும் சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்குகளை, ரியாதான் கையாண்டு வந்ததாகவும் அவர் கணக்கில் இருந்து கடந்த ஒரு வருடமாக, 15 கோடி ரூபாய் வரை, நடிகை ரியா சக்கரவர்த்திக்குப் பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் இதில் மோசடி நடந்திருப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.

அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை

இதையடுத்து பாட்னா போலீசாரும் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பது குறித்து அமலாக்கத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறையும் நடிகை ரியா மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

15 கோடி ரூபாய்

15 கோடி ரூபாய்

சுஷாந்த் சிங் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பீகார் போலீசார் விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சுஷாந்த் சிங் வழக்கு தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நடிகை ரியா சக்கரவர்த்தி நேற்று ஆஜரானார்.

செளவிக் சக்கரவர்த்தி

செளவிக் சக்கரவர்த்தி

தனது சகோதரர் செளவிக் சக்கரவர்த்தியுடன் இணைந்து அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றார். இவர்கள் சுஷாந்துடன் பிசினஸ் பார்ட்னர்களாகவும் இருந்தனர். ரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது நடிகர் சுஷாந்த் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 15 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன.

வேலைக்காரர்

வேலைக்காரர்

இந்நிலையில் ரியா கடந்த ஒரு வருடமாக யார் யாரிடமெல்லாம் போனில் பேசி இருக்கிறார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதில், நடிகர் சுஷாந்த் சிங்கிடம் பேசியதை விட அவர் வீட்டு வேலைக்காரர் சாமுவேல் மிரண்டாவிடம்தான் நடிகை ரியா அதிகமாக பேசி இருக்கிறார். சாமுவேலிடம் 287 முறையும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம் 145 முறையும் பேசியுள்ளார்.

இயக்குனர் மகேஷ் பட்

இயக்குனர் மகேஷ் பட்

அவரது தந்தையிடம் 1192 முறையும் சகோதரர் செளவிக்கிடம் 1069 முறையும் தனது முன்னாள் மானேஜர் ஸ்ருதி மோடியிடம் 761 முறையும் நடிகை ரியா பேசியுள்ளார். அதோடு தனது வழிகாட்டியும் இயக்குனருமான மகேஷ் பட்டிடம் 16 முறையும் பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூரிடம் 23 முறையும் பேசியுள்ளார். நடிகர் சுஷாந்த், ரியாவை 28 முறை மட்டுமே அழைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X